சினிமா

கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்

29views
‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.
லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.
நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது.
நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார்.
இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல் மனைவி சாந்தி ஹம்சவிர்தன் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சோகத்தில் மூழ்கி இருந்த அவர் அதில் இருந்து மீண்டெழுந்து தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தற்போது துவங்கி உள்ளார். லியோ ஹம்சவிர்தன் மற்றும் அவரது மனைவி நிமிஷா லியோ ஹம்சவிர்தனுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!