சினிமா

KSM ஸ்க்ரீன் பிளே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது ‘யாமன்’

30views
KSM ஸ்க்ரீன் பிளே பிலிம்ஸ் தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரும் திகில் கலந்த திரைப்படம் ‘யாமன்’
காதல், திரில்லர், காமெடி திரைப்படங்கள் தொடர்ச்சியாக கோடம்பாக்கத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் திகில் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது ‘யாமன்’
சக்தி சிவன் படத்தின் கதாநாயகனாகவும், காயத்திரி ரீமா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இருவரின் நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும் என்கின்றனர் திரைக்குழுவினர்.
மேலும், திவ்யபாரதி, சம்பத்ராம், L ராஜா, அருள் D சங்கர், உதயராஜ், ஆதேஷ்பாலா, ரஞ்சன், சத்யசிவா, தயாளன், திருச்சி சாதனா, கோவை உமா, பார்த்திபன் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர்.
படத்திற்கு இசை சக்தி ஷாம், ஒளிப்பதிவு மாதவன் நீலகண்டன், படத்தொகுப்பு தினேஷ், சண்டைப்பயிற்சி ரவி ராஜ், நடனம் GS திவாகர், ஒப்பனை கோபி, தொழிநுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கின்றனர்.
KS சுனில் இணைத்தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த யாமன் திரைப்படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருக்கிறார் KS மணிகண்டன்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடி கொண்டு வருவதாக படத்தின் இயக்குனர் தெரிவிக்கிறார்.

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!