சினிமா

தமிழில் தடம் பதிக்கும் பிரபல கன்னட மற்றும் தெலுங்கு நடிகர் தீக்ஷித் ஷெட்டி

19views
ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்க சாரா இயக்கும் படத்தில் நாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார்
‘கே டி எம்’, ‘பிளிங்க்’, ‘தசரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்கு படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
பான் இந்தியா திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்கிறார். ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை சாரா இயக்குகிறார், வெங்கி சூரினேனி ஒளிப்பதிவை கையாள்கிறார். நாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கிறார்.
இப்படத்திற்காக ‘காஸ்ட் அவே,’ ‘கோட் லைஃப்’ போன்ற படங்களுக்கு இணையான அர்ப்பணிப்போடு தீக்ஷித் ஷெட்டி தன் உடலை வருத்தி தத்ரூபமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் மலேசியாவில் நடந்து வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!