சினிமா

“பாடு நிலாவே தேன் கவிதை” கவிஞர் மு.மேத்தா

38views
உதயகீதம் படத்தில் சிறையில் மோகன் இருக்கும் போது அவரை பார்க்க வரும் ரேவதி, சிறையின் வெளியே நின்று கொண்டு நிலாவை பார்த்து “பாடு நிலாவே தேன் கவிதை” என மோகனை மனதில் நினைத்து பாடுவார். அதற்கு பதில் சொல்ற மாதிரி மோகனும் “பாடு நிலாவே தேன்” என பாடுவார்.
ஹீரோ சிறைக்குள் இருக்கும் போது அவர் கண்களுக்கு நிலா எப்படி தெரியும். அதனால அவர் பாடும் போது ஒரு “ம்” சேர்த்து “பாடும் நிலாவே தேன் கவிதை“ அப்படி இருக்கலாமே” என்று இசைஞானி சொல்ல…. கதாநாயகன் நாயகியை நிலவாக எண்ணி “பாடும் நிலாவே” என பாட… கவிஞர் மு.மேத்தா இசைஞானியிடம் “அண்ணே நீங்க சேர்த்த அந்த “ம்” வார்த்தை இந்த பாட்டை ஜம்முனு ஆக்கீடுச்சு” என்று கூறி மகிழ்ந்தார்… இந்த பாட்டை பாடிய பிறகே SPB இசை ரசிகர்களால் பாடும் நிலா என்று கொண்டாடப்பட்டார்…
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அநாதையா…
வலி மிகுந்த வார்த்தைகளா இல்ல வார்த்தைகளுக்குள்ளும் இத்தனை வலிகளா… விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதனின் இதயம் பிழிந்து கடைந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு இப்படி வலிகளை வடுக்களாக உணர்த்தி விட்டு சென்றிருப்பார் கவிஞர் மு.மேத்தா.. அந்த வடுக்களை மருந்து கொண்டு தடவி ஆறுதலுடன் கூடிய ஆசுவாசப்படுத்தி இருப்பார் இசைஞானி.
மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே..
கதைக்காக எழுதிய இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் தனக்காகவே எழுதியதாக இசைஞானி ஒரு நிகழ்வில் கூறி இருப்பார். இசையை ரசிக்கும் ரசிகர் கூட்டம் என் இசையை பார்ப்பார்கள்… அந்த இசையால் மட்டுமே நான் அவர்களை அரவணைப்பேன். தலைமுறை தாண்டி என்றும் எல்லோராலும் கொண்டாடி தீர்க்கும் இசையின் ராகம் இது தானே என இசைஞானி சொல்வதை போல இந்த வரிகள் அமைந்திருக்கும்.
முதன் முதலாக மனோபாலா இயக்கத்தில் வெளிவந்த ஆகாய கங்கை படத்தில் “தேனருவியில் நனைந்திடும் மலரோ” பாடல் இவருக்கு இசைஞானியின் இசையில் முதலாவதாக அமைந்திருந்தாலும் குறுகிய காலத்தில் இவரின் புலமையின் மேன்மையால் சூப்பர் ஸ்டாரின் வேலைக்காரன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் அற்புதம் கிடைக்க பெற்றது இசைஞானி இவர் பால் வைத்த அசாத்திய நம்பிக்கையும் அன்புமே என்றால் அது மிகையாகாது. “பாடு நிலாவே தேன் கவிதை” பாடல் S.P.பாலசுப்பிரமணியம் என்ற மாமேதையை பாடும் நிலாவாக்கியது போல பாரதி படத்தில் இவர் எழுதிய “மயில் போல பொன்னு ஒன்னு” பாடல் பவதாரணிக்கு தேசிய விருதை பெற்று பெருமை படுத்தியது என்று சொல்லலாம். இன்னும் நிறைய நிறைய பாடல்கள் அத்தனை எழுதி இருந்தாலும் இந்த பாடல்கள் எல்லாம் ஒவ்வொரு பாமர இசை ரசிகனின் உள்ளங்களிலும் வரிகளுடன் சேர்ந்து இசையாய் இசைந்து கொண்டிருக்கும் தலைமுறைகள் தாண்டி…
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!