சினிமா

இந்திக்கு சென்றதும் படத்தில் தம் அடிக்கும் ஜோதிகா

56views
உலகில் பெரும்பான்மையான போதைப் பொருட்கள் ஒரு காலத்தில் வலி நிவாரண மருந்துகளாக இருந்தவை என்பது தான் இந்தக் கதையின் சாராம்சம்.
ஒரு பார்மா கம்பெனி தயாரிக்கும் மருந்து போதைப் பொருளாகிப் போகிறது என்பதையும்,ஒரு upper, middle, lower வகை குடும்பத்தில் வாழும் பெண்கள் தொழில் முனைவோராக முனையும் போது நடக்கும் இழப்பை சரி செய்ய தற்காலிகமாக வேறொரு பிஸினஸை செய்ய முற்பட அதில் வரும் லாபத்தினைப் பார்த்து மீண்டும் செய்யும் போது வரும் சிக்கலால் அதை விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவிக்கும் தவிப்புகளே இந்த டப்பா கார்டெல்.
இதற்கிடையில் எப்படியாவது நல்ல பேர் வாங்கிவிடத் துடிக்கும் பெண் போலீஸ், போதைத் தடுப்பு பிரிவில் வேலை செய்யும் அதிகாரி என இருவரும், மேலதிகாரிக்கு விசுவாசமாகி வெளிநாடு செல்லத் துடிக்கும் தனியார் நிறுவன ஊழியர், கூட இருப்பவரை விட தன் வளர்ச்சி முக்கியம் என நினைக்கும் பலரின் சுயநலம், அது எந்த உறவானாலும் சரி அது மற்றவரை எந்த அளவில் பாதிக்கும் என எல்லாரையும் காட்டி அசத்தலாகப் போகிறது.
வேலைக்காரி எதிர்பார்க்கும் மரியாதை, அதேசமயம் வெளியே எல்லா இடத்திலும் கிடைக்கும் ஓசி மரியாதை ஆனால் வீட்டில் சுய மரியாதை இல்லாமல் வாழும் அப்பர் க்ளாஸ் மனநிலை என ஜோதிகாவும், நிமிஷா சஜயனும் ஒரு பக்கம் விளாச,
குடும்ப பிணைப்பு, தவிப்பு என ஷாலினி பாண்டே இயலாமையில் வெடித்தால், அஞ்சலி ஆனந்தும், சாய் தமன்கரும் ஆபாசமில்லாத லெஸ்பியன் உறவுகளிலும் இருவரும் அவரவர் செய்யும் வேலைகளுக்கு நியாயம் சேர்த்து அசத்துகிறார்கள்.
எல்லாவற்றையும் விட போதை தடுப்பு அதிகாரியாக கஜ்ரஜ் ராவ் உண்மையான அதிகாரியைப் போலவே அப்படியே நம்ப வைக்கிறார்.
ஒரு நிழலுலக ஆளாக இருந்து ரிடயர்டாகி மீண்டும் நிழலுலக வேலையைத் தொடங்குவதிலாகட்டும் அதை செயல்படுத்துவதிலாகட்டும் தனி ஆவர்த்தனம் செய்கிறார் ஷபனா ஆஸ்மி.
என்ன போதைப் பொருள் தயாரிப்பை உண்மைக்கு பக்கமாக காட்டுகிறேனென்ற பெயரில் செய்முறை விளக்கம் கொடுக்கிறார்கள்.
மும்பை போனதும் பிஸினஸ் கிளாஸ் அப்பர் ஸ்டேட்டஸ் பெண்ணாக ஜோதிகா அதை தம்மடித்தும், சரக்கடித்தும் நடித்து வெளிக் காட்டியிருக்கிறார். ஆனால் இங்கிருக்கும் போது இந்த மாதிரி தேர்வு செய்திருப்பாரா என்பது மனதில் தோன்றாமலில்லை.
இரண்டாம் பாகத்திற்கான லீடு சரியாக இருக்கிறது.
நெட்பிளிக்ஸில் இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!