சினிமா

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது

50views
பல வெற்றிப் படங்களையும் ‘மத்தகம்’ இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது,” என்று தெரிவித்தார்.
ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய அவர், “ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கு காரணம் ரவி மோகன் வழங்கும் முழு ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் தான். இதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இசை – சாம் சி எஸ்
ஒளிப்பதிவு – எழில் அரசு கே படத்தொகுப்பு – கதிரேஷ் அழகேசன்
தயாரிப்பு வடிவமைப்பு – சண்முகராஜா

இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரம்:
நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா
இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்
சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்
ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்
நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்
ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்
தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்
விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்
கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்
தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு

Right Click & View Source is disabled.

error: Content is protected !!