சினிமா

TTF வாசனின் IPL-ல் திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்

23views
மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார்.
புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், பிரபல இந்தி திரைப்பட பாடகருமான சிவம் மகாதேவன், அறிமுக இயக்குனர் கருணாகரன் IPL திரைப்படத்தில் டூயட் பாடலை பாடியுள்ளார்.
TTF வாசன், குஷிதா இருவரும் நடிக்கும் இந்த பாடலை அந்தமான், கேரளா, பாண்டிச்சேரி போன்ற எழில்மிகு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கிஷோர், அபிராமி, சிங்கம்புலி, ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், திலீபன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். G.R. மதன் கிருஷ்ணன் தயாரிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் IPL திரைப்படத்தின் பிண்ணனி இசை சேர்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!