சினிமா

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’*

35views
‘திருநெல்வேலி’ திரைப்படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் உதயா, கலைப்பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக ‘அக்யூஸ்ட்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார்.
ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
மருதநாயகம் ஐ ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். முன்னணி எடிட்டரான கே.எல். பிரவீன் படத்தொகுப்பை கையாளுகிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்கம்: ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும், பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பூஜை சென்னையில் ஜனவரி 2 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பு சங்கம் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து 2025 கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!