சினிமா

புதுச்சேரி இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலை முயற்சி ‘பாவக்கூத்து’

92views
புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக புதுச்சேரி இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலை முயற்சி ‘பாவக்கூத்து’.
இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகிறார். இவர் எப்புரா என்கிற முழு நீள காமெடி திரைப்படத்தை உருவாக்கி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். இந்தி மற்றும் மலையாள மொழியிலும் டப்பிங் ஆகியுள்ளது எப்புரா திரைப்படம்.
படத்தில் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார். இவர் “நெடுமி” , “ராயல் சல்யூட்” , தமிழினி, ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மற்றும் சிறப்பு கதாபாத்திரமாக விஜய் முருகன் நடித்துள்ளார், கதாநாயகியாக ரஞ்சான தியாகராஜன், காமெடியனாக காத்து கருப்பு கலை முக்கிய கதாபாத்திரத்தில் சீரில் சாகா ஜானி, சரஸ்வதி ரமேஷ் , கார்த்திக் சிவா, ‘கலைமாமணி’ நந்தகோபால், தேசிய விருது பெற்ற விஜி (எ ) வீரம்மாள் மற்றும் திருமேனி அழகன், திவ்யா, யுவதி பிரியா, சரவணன், சுரேஷ் ,ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன், கண்ணன், அப்துல்ஹமீது,அப்துல் ஷெரிப், திவாகர், யுவைஸ் முகமது, ரித்திகா, குழந்தை நட்சத்திரமாக கனிஷ்கா, ஆகியோர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுச்சேரியில் 21 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பாவக்கூத்து’ படத்திற்கு ‘அகசி பியர்’ இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக ‘ஆல்ட்ரின் மெக்கடோ நிக்சன்’ பணியாற்றி இருக்கிறார். படத்தொகுப்பு ராஜ் கணேஷ் மற்றும் விளம்பர வடிவமைப்பு தீரன்,வண்ணக்கலவை ‘கர்சிவ் ரெக்கார்ட்ஸ்’ ஓளிப்பதிவு மற்றும் சிறப்பு சப்தம் ‘ விக்கி’.
5.1ஆடியோ மிக்சிங் “பீசர் ஸ்டுடியோ”, புரொடக்ஷன் மேனேஜர் செல்வம், கலை இயக்குனராக ‘டிவி வசந்தன்’ பாடல் ஆசிரியர் பிரசாந்த் மற்றும் காஸ்டியூம் “சரஸ்வதி ரமேஷ்” மேக்கப் “தீபா”, நடன இயக்குனர் “சியா” ஸ்டண்ட் இயக்குனர் “எழில் வேந்தன்” பாடகர் பிரசன்னா ஆதிசேஷ, தமிழ் வெங்கட், பவானி, ப்ரீத்தி வினோத் , இணை இயக்குனராக ‘சுதாகர்’, ‘ராஜ் கணேஷ்’ பணியாற்றியுள்ளனர். துணை இயக்குனராக மதிமாறன்,கிருபாநிதி, ஸ்டில்ஸ் “சந்துரு” , மனோஜ் பி.ஆர்.ஓ வாக செயல்படுகிறார்.
இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மேலும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பாவக்கூத்து ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!