சினிமா

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்.எல்.பி வழங்கும் எஸ்.ஜெகநாதன் தயாரிப்பில், ”டப்பாங்குத்து” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

13views
மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி (Modern Digitech Media LLP) வழங்கும், எஸ். ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்துவீரா இயக்கத்தில், மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ”டப்பாங்குத்து”. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் முத்துவீரா பேசியதாவது….
மதுரையைச் சுற்றி நடக்கும் தெருக்கூத்து கலைகளை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளோம். கதாநாயகன் ஒரு தெருக்கூத்து கலைஞர், நாயகி தெருக்கூத்து ஆசைப்படும்போது, கதாநாயகனின் மாமா தடை போடுகிறார், கதாநாயகனின் அம்மா பற்றிய மர்மம் என்ன என்பது தான் இந்தப்படத்தின் கதை. கிராமியக்கலைகள் அழிந்து வருகிறது அதைப் பதிவு செய்யும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.
நாயகன் சங்கரபாண்டி பேசியதாவது….
நாட்டுப்புறக் கலைகளை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். கிராமங்களில் தெருக்கூத்து இப்போதும் நடந்து வருகிறது. நாங்களும் நிறையக் கலந்து கொண்டுள்ளோம். இந்த காலத்தில் தெருக்கூத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நம் கலைகள் மொத்தமாக அழிந்து போகுமோ என்ற கவலை இருந்தது. ஒரு முறை பாவைக் கூத்து கலைஞர்கள் உணவுக்கு அல்லல்படுவதைப் பார்த்த பொழுது, மிக மிக வருத்தமாக இருந்தது. இப்படியான காலகட்டத்தில் தெருக்கூத்தை மீட்டெடுப்பது போல், ஜெகநாதன் சார் படம் எடுக்கிறார் என்ற பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிப் பட்ட படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு கரும்பு திண்ணக் கூலி தான். கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த மாதிரி படத்தை எடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடனம் அமைத்த தீனா மாஸ்டர், உடன் நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. கிராமியக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
நாயகி தீப்தி பேசியதாவது….
இந்தப்படத்தில் அனைவரும் குடும்பமாக வேலை செய்துள்ளோம், இந்தப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கிறது கண்டிப்பாக மக்கள் அனைவருக்கும் பிடிக்கும். நான் பஞ்சாபியாக இருந்தாலும் அப்பா இங்கு செட்டிலானவர், நான் சென்னையில் பிறந்தவள், எனக்குச் சென்னை தான் எல்லாம் தான். அதனால் இந்தப்படத்தில் கிராமிய கலாச்சாரம் புரிந்துகொள்வது எளிமையாக இருந்தது.முழு அர்ப்பணிப்பையும் தந்து உழைத்திருக்கிறேன் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி
சிறப்பு அழைப்பாளர் இயக்குநர் அரவிந்த்ராஜ் பேசியதாவது…
இன்றைய சமுதாயத்தில் நாம் பழைய தமிழ் பேசுறதே ஒரு கஷ்டமான விஷயம் . தமிழருடைய வாழ்வே இசையும் பாடல்களும் தான் நாம் இந்த அற்புத கலைகளை, இயல் இசை நாடகம் தான் பிரித்து வைத்திருந்தோம் . நம்ம வாழ்க்கையில் எல்லாமே இயலும் இசையும் தான். நம் கலாச்சாரத்தில் எல்லாமே பாட்டு தான். குழந்தை பிறந்தால் பாட்டு, வளரும் போது பாட்டு, வயசுக்கு வந்தா பாட்டு, நின்னா பாட்டு, நடந்த பாட்டு, என எல்லாத்தூக்குமே பாடல்கள் நிறஞ்சிருந்தது. இதெல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. அனைத்தையும் நாம் மீட்டுக் கொண் வரவேண்டும் எனும் எண்ணத்தில், ஒரு நல்ல முயற்சி எடுத்த இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம எல்லாருமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். கால காலத்துக்கு மக்களோட மனதிற்குள் நிலைத்து நிற்கும் வண்ணம் ஒரு அற்புதமான படைப்பாகக் கொண்டு வந்த இந்த படக்குழுவிற்கு நன்றிகள். இவர்கள் ஒரு திரைப்படம் எடுப்பது மாதிரி இல்லாமல், குடும்பம் போல் எல்லோரும் ஒரே இடத்தில் போய் தங்கியிருந்து, இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். மேலைநாடுகளில் இன்றும் தியேட்டர் என்ற ஒரு குரூப் இருக்கிறது தியேட்டர்ல இன்னும் நாடகங்கள் நடக்கிறது. அதுல இந்த மாதிரி நல்ல முயற்சிகள் நடந்து வருகிறது. அது போல முயற்சி செய்துள்ள இந்த குழுவினருக்கு அனைவரும் பெரிய ஆதரவு தரணும். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிக்கையாளர்களின் கடமை. நம்ம தமிழுக்குச் செய்த ஒரு தொண்டு மாதிரி நினைத்து, இதை செய்ய வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களை விட நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்கள் ஓடுவது தான் சமீபத்திய வரலாறாக உள்ளது. அதனால் இதை முறைப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள் என்றால், நிச்சயமா இந்த படம் ஒரு பெரிய வெற்றிப் பட மா இருக்கும். அதற்காக முழு முயற்சி எடுத்த கதாநாயகனுக்கும், எல்லாருக்குமே வந்து வாழ்த்துக்களைக் கூறி குணா அவர்களுக்கும், தயாரிப்பாளர் அவர்களுக்கும் நம்ம இயக்குனர்அவர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன் எல்லாம் வல்ல இறைவனை அருளால் இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று என் சார்பாக எங்கள் குழுவின் சார்பாகவும் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் நன்றி.
மதுரையைச் சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள். ஆனால் தர்மலிங்கமா தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறான். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறான், தனத்திற்கு பின்னணி என்ன?ஏன் தர்மலிங்கம் அவளை ஆடக்கூடாது என்று கூறுகிறான்.. தனம் பாண்டியோட மேடை ஏறினாளா எனப்து தான் இப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட சங்கர பாண்டி கதாநாயகனாக நடிக்க தீப்தி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் காதல் சுகுமார், ஆன்ரூஸ், துர்கா,விஜய் கணேஷ், ரோபோ சந்துரு, மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என நாட்டுப்புற கலைஞர்களின் பட்டிதொட்டியெங்கும் பட்டய கிளப்பிய பாடல்கள் இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தின் பாடல்கள் அனைத்திற்கும் தீனா மாஸ்டர் பிரமாண்டமாக நடனம் அமைத்துள்ளார்.. தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது.. இப்படத்தின் கலையை சிவாயாதவ் கவனிக்க, ஒளிப்பதிவை ராஜா கே பக்தவச்சலம் கவனிக்க, சரவணனின் இசையில், குணசேகரனின் கதை திரைக்கதை வசனத்தில், முத்துவீராவின் இயக்கத்தில் மதுரை மண்ணின் மணம் மாறாமல் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
சென்சார் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு ‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் இம்மாதம் நவம்பர் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – முத்துவீரா
கதை திரைக்கதை வசனம் – STகுணசேகரன்
ஒளிப்பதிவு – ராஜா கே பக்தவச்சலம்
இசை – சரவணன்
நடனம் – தீனா மாஸ்டர்
சண்டை பயிற்சி – ஆக்க்ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு – செல்வரகு எஸ்
தயாரிப்பு – Modern Digitech Media LLP

Right Click & View Source is disabled.

error: Content is protected !!