சினிமா

ஃபிரீடம் அட் ஈவினிங் – இந்த ஹிந்தி டாக்குமெண்டரி படத்தில் நடிகர் ஆதேஷ் பாலா

496views
மறைந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சிவராமனின் மகன் ஆதேஷ் பாலா. பல திரைப்படங்களில் மிக முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நடிகர். சமீபத்தில் இவர் ஒரு ஹிந்தி டாக்குமெண்டரி படத்தில் நடித்திருந்தார்.
ஃபிரீடம் அட் ஈவினிங் – இந்த ஹிந்தி டாக்குமெண்டரி படத்தில் இவருக்கு தீவிரவாதி கதாபாத்திரம்.

“இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் நடித்தேன். முதல் முறையாக ஹிந்தி பேசியும் இந்த படத்தில் நடித்திருப்பது இத்தனையாண்டு நான் திரையுலகில் தொடர்ந்து இருப்பதற்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்த வசந்த்ரவி இந்த டாக்குமெண்டரிக்கு குரல் கொடுத்திருப்பது ஒரு பெருமை. இது பல விருதுகள் வாங்கும் ” இவ்வாறு நடிகர் ஆதேஷ் பாலா கூறினார்.

இந்த டாக்குமென்டரியின் இயக்குனர் துவாரா. ஒளிப்பதிவு : அவினாஷ், படத்தொகுப்பு மற்றும் DI : ஸ்ரீஜித் சாரங் , சவுண்ட் டிசைன் : சிங்க் சினிமா
யூ -டியூப் வலைத் தளத்தில் இந்த காணொளியை நீங்கள் பார்க்கலாம்:

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!