252views

இந்த டைட்டில் ஒரு ஆங்கில பட டைட்டில் மிகப்புகழ் பெற்ற டைட்டில் கல்ட்கிளாசிக், அந்தக்கதை வேறு இந்தக்கதை வேறு ஆனாலும் அதை நம் படத்திற்கு வைக்கலாமா என யோசித்தோம். நாம் ஆத்மார்த்தமாகக் காதலுடன் உருவாக்கியுள்ள படம் அந்தப்படத்திற்குத் தரும் மரியாதையாக இருக்கும் என்பதால் வைத்தோம். நாம் நினைத்த மாதிரி படத்தை உருவாக்க வேண்டும் எனும்போது, அதில் நிறையப் பிரச்சனைகள் வரும் அதற்கான உழைப்பை, நம் அர்ப்பணிப்பைத் தந்து தான் ஆக வேண்டும். லோகேஷ் என் நெருங்கிய நண்பர். நான் எது செய்தாலும் அதைக் கவனித்துப் பாராட்டுவார். இந்தப்படம் விக்ரம் சக்ஸஸ் டைமில், 20 நிமிடம் தயாராகியிருந்தது, அப்போது பார்த்தார். பின்னர் லியோ வெளியீட்டு டைமில் முழுசாக முடித்துவிட்டுக் காட்டினோம் அவர் பேனரிலேயே இந்தப்படம் வெளியாவது மகிழ்ச்சி. அவர் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநராக இருக்கிறார், எப்போதும் நாங்கள் சினிமா பற்றித் தான் பேசுவோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. நண்பர் ஜெகதீஷ் மற்றும் சக்திவேலன் சார் இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி. இப்படத்தில் நிறையப் புதுமுகங்கள் அர்ப்பணிப்போடு வேலை பார்த்துள்ளனர். தயாரிப்பாளர் சினிமா மேல் உள்ள காதலால் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவருக்காக இந்தப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அப்பாஸ் ஒரு சினிமா பைத்தியம், சினிமா தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. தீவிரமான மணிரத்னம் ஃபேன் அவனை இயக்குநராக இந்த உலகம் பாராட்டுவதைக்காண நானும் காத்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
You Might Also Like
செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!
எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப்...
பறை வாசித்த விரல்கள் தான் இப்போது…../ கிராமியக் கலைஞர் கருப்புச்சாமி / நேர்காணல்.
'வேம்பத்தூரான் கிராமிய கலைக்குழு' என்ற இசைக்குழுவை நடத்திவருகிறார் திரு.கருப்புச்சாமி. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பறை இசையுடன் தொடங்கிய இசைவாழ்க்கை தற்போது தவில்,உடுக்கை, உறுமி என நீள்கிறது....
எங்கள் கிராமமே இசை கிராமம் தான்…/ கிராமிய பாடகர் AR சத்தியநாதன் – நேர்காணல்
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் AR சத்தியநாதன். தென்மாவட்டங்களில் நடக்கும் கிராமிய திருவிழாக்களில் இரவாதி இசைக்குழுவின் பங்களிப்பு அதிகம். ஒரு அந்தி சாயும் பொழுதில் அவரை சந்தித்தேன். இதோ...
‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!
தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்...
இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் ‘418’!
பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள '418' திரைப்படம், அக்டோபர் 23...









