விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் பரிசுகள் வழங்கினார்.
இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அக்ஷயா பன்னாட்டு(சிபிஎஸ்சி) பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. போட்டியை விருதுநகர் மாவட்ட சதுரங்கப் போட்டி கழக தலைவர் கோபால்சாமி துவக்கி வைத்தார். போட்டியில் மாவட்ட அளவிலான பள்ளிகளை சேர்ந்த 206 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
சதுரங்க போட்டியில் 8வயது, 10 வயது, 13 வயது மற்றும் அனைத்து பிரிவை சேர்ந்தவர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர். ரகுராமன் பரிசுகளை வழங்கினார். பள்ளி தாளாளர் வெங்கடேஷ் மற்றும் பயிற்சியாளர் தினேஷ்குமார் போட்டி ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்