தமிழகம்

மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, நேதாஜி முப்பெரும் தலைவர்களுக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

70views
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா நினைவு, நேதாஜி பிறந்த நாள் என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, நேதாஜி ஆகிய தலைவர்களின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்களின் வாழ்கை வரலாற்று தொகுப்பு புத்தகங்களை பொது மக்களுக்கு கோபி காந்தி பரிசாக வழங்கி பேசினார்.
அப்போது கோபி காந்தி பேசியதாவது, மகாத்மா காந்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பொதுமக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் அவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடியவர் எனவும், நேதாஜி மக்களின் உழைப்பிற்கு மரியாதையை பெற்று தந்தவர் அதற்காக போராடினார் எனவும், அறிஞர் அண்ணா மனிதர்களிடையே பிரிவினை ஏற்படாமல் இருக்க போராடினார். எளிய குடும்பத்தில் பிறந்து கோடிகணக்கான இதயங்களில் இடம் பிடித்த மாபெரும் தலைவர் தி.மு.க கட்சியை தோற்றுவித்து தமிழக மக்களின் நன்மைக்காக இறுதி மூச்சு வரை போராடினார் எனவும், முப்பெரும் தலைவர்களுக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி புகழாரம் சூட்டி பேசினார்.
இன்றைய இளைஞர்கள் இது போன்ற தலைவர்களை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு சமுதாயத்துக்கும் பயனுள்ள வகையில் வாழவேண்டும் எனவும் கூறினார். இவ்விழாவில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!