தமிழகம்

சென்னை இராயபுரத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் நலசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா

30views
சென்னை இராயபுரத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு, ஜி.ஏ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டாக்டர். கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி, 1000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி சிறப்புரையாற்றினார் .

இந்நிகழ்வில் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.சேகர் , இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான், இராயபுரம் கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளர் இரா.செந்தில்குமார், இராயபுரம் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் வ.பெ.சுரேஷ், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!