காட்டுபகுதிகளில் தொடர்ந்து பழுதாகும் அரசு பேரூந்துகள்.. அவதிக்குள்ளாகும் பயணிகள்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்…
கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுவதால் பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை அரசு அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் பழுதான பேருந்துகளையே தொடர்ந்து இயக்குவதால் இன்று 6/11/2022 ஞாயிற்றுக்கிழமை காலை பன்றிமலையில் இருந்து தாண்டிக்குடி பண்ணைக்காடு வழியாக வத்தலக்குண்டு சென்ற அரசு பேருந்து (எண் 2490) காட்டு யானைகள் அதிகம் நடமாடக்கூடிய எதிரொலிப்பாறை பகுதியில் பழுது ஏற்பட்டு நின்று விட்டது....