“பொன்மாலைப் பொழுது” குழுவினரின் மாபெரும் இசை கொண்டாட்டம்
மாலை வேளையில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாயின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களோடு பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் கணேஷ் ராமமூர்த்தி உள்ளிட்ட பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியை காண துபாயின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியை, மக்கள் கொஞ்சமும் கலையாமல் கரவொலி எழுப்பி ரசித்தனர்....