தொலைக்காட்சி

தொலைக்காட்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 13-1-25 போகி அன்று இரவு 9:00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. வேலை முக்கியம் என்று சொல்லும் ஆண்கள் VS வீடுதான் முக்கியம் என்று சொல்லும் பெண்கள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியாக இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர்கள் திரு.ரமேஷ் கண்ணா, திரு. சக்தி சிதம்பரம் மற்றும் திருமதி லஷ்மி ராமகிருஷ்ணன் பங்கு பெற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி தை 1 பொங்கல் நாளான செவ்வாயன்று காலை 9 :00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் இனிய இல்லறம் சிறக்க பெரிதும் துணை நிற்பது மகளிரின் மதிநுட்பமா? ஆடவரின் ஆளுமையா? என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா,...
தொலைக்காட்சி

பொங்கல் திரைத் திருவிழா

தமிழ் திரை உலகிற்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கும் எப்போதும் ஓர் நெருங்கிய தொடர்பு உண்டு. பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் திரைப்படங்களையும் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்று கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. MGR, சிவாஜி காலம் தொடங்கி தற்போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை நடித்து வெளியான திரைப்படங்களின் வெற்றி அவற்றின் சிறப்பம்சம், மறக்கமுடியாத பாடல்கள் என சகல நிகழ்வுகளையும்...
தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சியின் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவியில் பொங்கல் தினத்தன்று காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “நாங்க வேற மாதிரி” ஜெயா டிவியில் பொங்கல் தினத்தன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது “நாங்க வேற மாதிரி” நிகழ்ச்சி. பிரபல ஆர்.ஜே மற்றும் வி.ஜேக்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அவர்களின் கலாட்டாக்களும் சுவாரசியமான நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. தொகுப்பாளர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமான பல போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் கமல் தொகுத்து வழங்க...
தொலைக்காட்சி

“நேர்படப் பேசு” மதிக்கப்படும் நம்பர்1 விவாத நிகழ்ச்சியாக “நேர்படப் பேசு” தேர்வு

சமகால அரசியல் போக்குகளை கட்சிப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு விவாதித்து பிரச்சனையின் பல கோணங்களையும் வெளிக்கொண்டு வருகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நேர்படப் பேசு” நிகழ்ச்சி. அரசியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு தலைப்புகள் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகின்றன. நெறியாளர்களின் துல்லியமான கேள்விகள் கூடுதல் சிறப்பாகும். நான்கு பங்கேற்பாளர்கள் மட்டும் பங்கேற்பது நேர்படப் பேசுவின் நடுநிலையை வெளிப்படுத்துகிறது. 13 ஆண்டுகளை கடந்தும்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2”

கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" முதல் சீசனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் வித்தியாசமாகவும், பிரம்மாண்டாகவும் உருவாகி...
தொலைக்காட்சி

ஆவுடையப்பன் குடும்பத்தை பழி தீர்க்கும் துர்கா – உண்மைகள் வெளிவருமா..?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் "கெளரி". இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது துர்கா ரூபத்தில் வந்திருக்கும் கனகா ஆவுடையப்பனின் குடும்பத்தையே ஆட்டிப் படைக்கிறாள். துர்காவை அழிக்க ஆவுடையப்பன் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் துர்கா பொடிபொடியாக்க, ஆவுடையப்பனின் குடும்பமே அதிர்ச்சியும், பயமும் கொள்கிறது. எனவே, துர்காவின் நடவடிக்கையில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க...
தொலைக்காட்சி

“நான் விக்ரம்”

மாறுபட்ட நடிகர், நம் இதயம் வென்ற 'சியான் விகரம்' தன் திரை அனுபவங்களையும், தன் மனதிற்கு நெருக்கமான நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும், ஒரு புதுமையான நிகழ்ச்சி "நான் விக்ரம்" புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் காலை 9:00 மணிக்கு உங்கள் ஜெயா டிவியில் காணத்தவறாதீர்கள்....
தொலைக்காட்சி

‘எல்லாமே சினிமா’

மண் மணம் மாறாமல் கதைக்கு உயிர் ஊட்டிய இயக்குனர் கஸ்தூரிராஜா தன்னுடைய திரை பயணத்தை ஜெயா டிவி நேயர்களுக்கு தான் பயணித்த நடிகர் நடிகைகளுடன் உணர்வுபூர்வமாக தன்னுடைய சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டும் இளம் இயக்குனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் தன்னுடைய திரை பயணத்தை பகிர்ந்த நிகழ்ச்சி "எல்லாமே சினிமா தான்" நிகழ்ச்சி வரும் புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் 1:30 மணிக்கு உங்கள் ஜெயா டிவியில் காணத்தவறாதீர்கள்....
தொலைக்காட்சி

புத்தாண்டு பலன்கள் 2025

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் நாம் புதிய நம்பிக்கையுடனும், தெம்புடனும்தான் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், பல சமயங்களில் நாம் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பது போல் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு ஏதாவது அனுபவ பாடத்தை கற்றுதருகிறது. அடிபட்டு மிதிப்பட்டு நாம் தெளிவதைவிட, ஆண்டின் துவக்கத்திலேயே, எதிர்வரும் ஆண்டு நம் வாழ்வில் என்னவெல்லாம் மாற்றங்களை தரப்போகிறது, ஆண்டின் எந்தெந்த மாதங்களில் நல்லது நடக்கும், எப்பொழுதெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டுமென நடக்கபோவனவற்றை முன்கூட்டியே...
1 2 3 4 13
Page 2 of 13

Right Click & View Source is disabled.

error: Content is protected !!