தமிழகம்

செய்திகள்தமிழகம்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வுகள் என்னென்ன? இன்று அறிவிப்பு

தமிழ்நாட்டில் 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு,இ-பதிவு முறை ரத்து போன்ற தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்று அச்சுறுத்தி வந்தது. பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் தீவிர நடவடிக்கையின் காரணமாகவும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் 2 வாரங்கள் தளவுகள் இல்லாத முழு ஊரடங்கும் அடங்கும். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது மாவட்டங்கள் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை இருக்கும் நிலையில் அந்த நடைமுறை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வர இ பதிவு கட்டாயம் என்ற நடைமுறை...
செய்திகள்தமிழகம்

ரேஷனில் 2வது தவணையாக ரூ.2,000க்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை 2,000 ரூபாய்க்கான டோக்கன் இன்றுமுதல் (11.06.2021) ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட உள்ளது. ஜூன் 15 முதல் அரிசி அட்டைதாரர்கள் காலை 8 மணிமுதல் 12 மணிவரை 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் அதை முறையாக பின்பற்றவில்லை என்பதால் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடுமையான ஊரடங்கின் பலனாக தொற்று வேகம் மெல்ல மெல்ல குறைந்தது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நோய் பரவல் 18 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு குறைந்த தளர்வுகளும், தொற்று பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு சற்றே அதிக தளர்வுகளும்...
செய்திகள்தமிழகம்

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் 6 மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பினனர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, "கடந்த ஆட்சியின் போது விவசாயி அல்லாத பலருக்கு கடன் வழங்யிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை, தள்ளுபடி செய்யும் அறிவிப்பு...
செய்திகள்தமிழகம்

கோயில் நில ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு! தமிழக அரசு அதிரடி!!

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் கோவில் நிலம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களின் நில விவரங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார் . இதையடுத்து கோவில் நிலங்களின் தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது . தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நில விவரங்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது . முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர்...
செய்திகள்தமிழகம்

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு!

மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டபோது தமிழ் மொழிக்கு வாய்ப்பளிக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை . இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் . இதன்படி இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள்...
செய்திகள்தமிழகம்

திரைப்பட இயக்குனர் சொர்ணம் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திரைப்பட இயக்குனர் சொர்ணம் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.சொர்ணம் (வயது 88), சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை 8.35 மணியளவில் மாரடைப்பால் காலமானார். எம்.ஜி.ஆர் நடித்த 32 படங்கள் உள்பட 40 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள அவர், தமிழில் வெளியான தங்கத்திலே வைரம், சீர்வரிசை, நீ ஒரு மகாராணி, ஆசை மனைவி, மேளதாளங்கள், கங்கா யமுனா காவேரி, நான் ஒரு கை பார்க்கிறேன், ஒரே ரத்தம், டாக்டர் அம்மா உள்பட 14 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் ஒரே ரத்தம் என்ற படத்தில் மு.க.ஸ்டாலின் நடித்திருக்கிறார். கலைமாமணி உள்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள கே.சொர்ணம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த கே.சொர்ணத்துக்கு...
செய்திகள்தமிழகம்

பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற புதிய செயலி அறிமுகம்: சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

சேலம் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற, 'சேலம் மாநகராட்சி வி - மெட்' செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி சார்பில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி சார்பில், 'சேலம் மாநகராட்சி வி-மெட்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியை செல்போனில் பெற கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 'Salem Corporation V med' செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி மருத்துவரின் ஆலோசனை மற்றும் காணொலி மூலம் மருத்துவர் குழுவுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் செல்போன் வாயிலாக...
செய்திகள்தமிழகம்

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தில் புதிய மாற்றம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை சிரமம் இல்லாமல் காக்கங்கரை ஏரி வழியாக நிறைவேற்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதி யில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ''தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்...
செய்திகள்தமிழகம்

‘இன்று முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்’

நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என அறிவிப்பு செய்யப்பட்டு அது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகள் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் ஆா்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். கரோனா இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரமும், 14 பொருள்கள் அடங்கிய...
1 425 426 427 428 429 441
Page 427 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!