தமிழகம்

செய்திகள்தமிழகம்

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்! மத்திய அரசு அனுமதி!!

சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார். அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த போது கொரோனா பரலல் ஏற்பட்டது. இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா 2ஆவது அலையும் வந்ததால் இடைப்பட்ட நேரத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்தார். அடுத்தது 3ஆவது அலை வரும் என்று கூறப்படுகிறது. எனவே தற்போது பரவல் குறைந்திருக்கும் போதே அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். கொரோனா காலம் என்பதால் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார். அவருடன் குடும்பத்தினரும் செல்ல...
செய்திகள்தமிழகம்

கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்ப பெறப்படும் – முதல்வர்!

தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கட்டுப்படுவோம், கட்டுப்படுத்துவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு 50 ஆயிரமாக தாண்டும் என கூறப்பட்ட நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது 15 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுக்கான பற்றாக்குறை இல்லை எனவும், தேவைப்படுவோருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கூடிய அரசு உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியால் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாகவும்,...
செய்திகள்தமிழகம்

முதல்வர் பயணத்தின் போது சாலையோரம் பெண் காவல் அதிகாரிகளை நிற்க வைக்க வேண்டாம் – டி.ஜி.பி உத்தரவு.!

முதல்வர் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் சமயத்தில், சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், தமிழக டி.ஜி.பி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக முதல்வர் அலுவல் ரீதியாக செல்கையில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களில் பெண் காவல் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் முதல்வரின் பயணங்களின் போது சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம். அவர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் சாலையோரத்தில் நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14-ம் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக தான் விற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. மதுபானம் வாங்க வருவோர் வரிசையில் நிற்க ஏதுவாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த பணியாளர்களை நியமித்து...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தர 60,000 மருந்துகள் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் இதுவரை 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் மட்டும் கருப்பு பூஞ்சை பாதிப்பு 150 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோருக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையில், இந்த கருப்பு பூஞ்சை நோய் இன்னொரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில்...
செய்திகள்தமிழகம்

குளச்சலில் கட்டுமரம், வள்ளங்களில் அதிகளவில் பிடிபடும் நெத்திலி மீன்கள்: ஊரடங்கு நேரத்தில் மீனவர்களுக்கு கைகொடுக்கிறது

குளச்சலில் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் அதிகளவில் நெத்திலி மீன்கள் பிடிபடுகின்றன. ஊரடங்கு நேரத்தில் இவை மீனவர்களின் வருவாய்க்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றன. தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விசைப்படகுகளுக்கான தடைக்காலமும் அமலில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் தடைக்காலம் 14-ம் தேதிமுடியவுள்ளது. மேற்கு கடற்பகுதியில் ஜூலை 31-ம் தேதி வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கரைமடி பகுதிகளில் மட்டும் வள்ளம், கட்டுமரங்களில் பிடிபடும் குறைந்த அளவு மீன்கள் கிராம, நகரப் பகுதிகளில் சமூக இடைவெளியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. எப்போதும் இல்லாத வகையில் ஒரு சாளை மீன் ரூ.10-க்கு விற்பனை ஆகிறது. தற்போதைய சூழலில் இவற்றை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, சுழற்சி முறையில் குமரி கடலோர கிராமங்களில் வாரத்தில் 3 நாட்கள் கட்டுமரம், வள்ளங்களில் கரைமடி பகுதிகளில் காலையில் இருந்து...
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு முடிந்ததும் மாவட்டச் செயலாளர் கூட்டம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

ஊரடங்கு முடிந்த உடனோ, அரசிடம்சிறப்பு அனுமதி பெற்றோ தேமுதிகமாவட்டச் செயலாளர்கள் கூட்டம்விரைவில் நடக்கும் என்று கட்சித்தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 2019மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்டபோதும் தேமுதிக வெற்றி பெறவில்லை. இதுபோன்ற தொடர் தோல்விகள், அக்கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளுக்கு செல்லஉள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்நடத்துவதாக இருந்தது. கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்குமுடிந்தவுடன்...
செய்திகள்தமிழகம்

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறப்பு; கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு இன்று மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 12) தண்ணீரை திறந்து வைக்கிறார். தற்போது அணையில் நீர் இருப்பு 96.80 கன அடியாக (60.75 டிஎம்சி) உள்ளது. காவிரியில் கர்நாடகம் மாதவாரியாக வரையறுத்து ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்குத் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் 17.2.2018-ல்தீர்ப்பளித்தது. காவிரி நீரை உரிய முறையில் பங்கீட்டுக் கொள்வதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையமும், நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை முறைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த...
செய்திகள்தமிழகம்

50 சதவீத பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம் செயல்படும் – தலைமை பதிவாளர் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஏற்று, நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொளி மூலமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. வழக்கறிஞர் அறைகள், சங்க அலுவலகங்கள், நூலகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து விசாரித்துவருகின்றனர். அரசு வழக்கறிஞர்கள் சிலர் நேரில் ஆஜராகிவருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜூன் 14ஆம் தேதிமுதல் மறு...
செய்திகள்தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. குறிப்பாக நேற்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஒடிசா அருகே கரையை கடக்கும்....
1 424 425 426 427 428 441
Page 426 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!