தமிழகம்

செய்திகள்தமிழகம்

மதிப்பெண்கள் இல்லாமல் சான்றிதழ் கொடுத்தால் வேலை பெறுவதில் சிக்கல் ஏற்படும் – ஓபிஎஸ்

"முக்கியத்துவம் வாய்ந்த 10ம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுவதால், 10ம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "11ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி என்ற வரிசையில், தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட மாட்டாது என்றும், தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும், அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக ஆட்சியில், கொரோனா தாக்கம் காரணமாக 10ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற...
செய்திகள்தமிழகம்

தமிழகத்திற்கு பல்வேறு தளர்வுகள்! அடுத்த அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஜூன் 21 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த அறிவிப்பில் டீக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் வரும் அறிவிப்பில் நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் பெரிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோ, டாக்சிகள் இயங்கினாலும், பணியிடங்களுக்கு சென்று வர பேருந்து சேவை இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகின்றனர். அதனால் நகரப்பேருந்துகள் 27 மாவட்டங்களில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறத. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்...
செய்திகள்தமிழகம்

யூ டியூப்பர் மதனை தேடும் பணி தீவிரம்: புதிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

தலைமறைவாக உள்ள யூ டியூப் மதனை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தன்னுடன் உரையாடும் பெண்களிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கினர். பின்னர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். சென்னையில் வசிக்கும் மதன்சேலத்தை சேர்ந்தவர். அவரைதேடிக் கண்டுபிடிக்க சென்னைபோலீஸார் சேலம் விரைந்துள்ளனர். மேலும், அண்டைமாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். சென்னையிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதனின் தந்தை, மனைவியிடமும்...
செய்திகள்தமிழகம்

வேகமாக நிரம்பி வரும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது பில்லூர் அணை. இந்த அணைக்கு கேரளம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரே பிரதான நீர்ப்பிடிப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கேரளத்திலும் நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி போன்ற பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிமாக பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழையின் காரணமாக புதன்கிழமை இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் படிப்படியாக அதிகரித்து தண்ணீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து, அணையின்...
செய்திகள்தமிழகம்

முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக அவர், பிரதமர் மோடியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகர் டெல்லிக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். அவருடன் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் சிலரும் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்கிறார். மத்திய அரசு தொடர்புடைய நீட் தேர்வு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்னை,...
செய்திகள்தமிழகம்

தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு; அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் திறப்பையொட்டி கல்லணையில்...
செய்திகள்தமிழகம்

மருத்துவமனையிலிருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம் ! எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை வேறொரு மாநிலத்திற்குச் சென்று நடத்துவதற்கு ஏதுவாக சிபிசிஐடிக்கு...
செய்திகள்தமிழகம்

முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்த காவிரி நீர்: மலர் தூவி வரவேற்ற டெல்டா விவசாயிகள்!!

மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறுகிறது. இதனால் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இவ்வாண்டு ஜீன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அவ்வாறு திறக்கப்பட்ட நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் வினாடிக்கு 3,000 கன அடி என்ற அளவில் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் இன்று (15.06.2021) அதிகாலை மூன்று மணிக்குத் திருச்சி மாவட்டம் முக்கொம்பை...
செய்திகள்தமிழகம்

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து ஜூன் 17ஆம் தேதி பாமக போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

மதுக்கடைகள் திறப்புக்கான காரணங்கள் உண்மை இல்லை என்பதால்தான் முதல்வரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது. மதுக்கடைகளைத் திறக்க ஆயிரமாயிரம் பொருளாதார, வணிகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க ஒரே ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது என ராமதாஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் நாளை மறுநாள் (17.06.2021) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: 'தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல. மது ஆலைகளின் நலனுக்கான அரசுதான் என்பது நேற்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் குடும்பங்களில்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை; நீலகிரி, கோவையில் கனமழை

இரண்டு வாரங்களுக்கு முன்பே பருவமழை துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் உதகை மற்றும் நீலகிரியின் மற்ற பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியது. மே மாத மத்திய பகுதியில் நல்ல மழைப்பொழிவு விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்தது. நேற்று உதகையில் 3.6 மி.மீ மழை பதிவானது. நடுவட்டம் பகுதியில் 10 மி.மீ மழையும், அப்பர் பவானியில் 42 மி.மீ மழையும், அவலாஞ்சியில் 35 மி.மீ மழையும், பந்தலூர் பகுதியில் 25 மி.மீ மழையும் பெய்தது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளிலும் கனமழை காரணமாக விளைநிலங்கள் பாதித்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதியான கோவை மாவட்டம், வால்பாறையின் சின்னக்கல்லார் பகுதியில் நேற்று 50 மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன்...
1 423 424 425 426 427 441
Page 425 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!