தமிழகம்

செய்திகள்தமிழகம்

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகள

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். ஆனால், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என கடந்த ஜன. 11 அன்று திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து, சிவா இயக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பின், கடந்த ஏப். மாதத்தில் தமிழகத்தில் கரோனா உச்சத்தில் இருந்ததால், அவரால் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல முடியவில்லை. இந்நிலையில், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், சமீபத்தில் அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனைகளை...
செய்திகள்தமிழகம்

“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்”- மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அதிமுகவின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள், அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ரூபம்.கே.வேலவன், அமமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்த சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
செய்திகள்தமிழகம்

கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் மழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசின் ஆதரவு விலையில் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் சேதமடைகின்றன. எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலையில் பெய்த மழை யால் கடலூர் அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த சுமார் 3,500 மூட்டை நெல் நனைந்தது. இதேபோன்று கள்ளக் குறிச்சி மாவட்டம்...
செய்திகள்தமிழகம்

‘வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த பகுதி’ மிக கனமழைக்கு வாய்ப்பு!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக காரணமாக இன்று நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், அசோக் நகர், வடபழனி...
செய்திகள்தமிழகம்

திமுகவில் மகேந்திரன் ஐக்கியம்; நடிகை ஸ்ரீபிரியா கிண்டல்..!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய காலம் முதலே அவருடன் இணைந்து பயணித்து வந்தவர் மகேந்திரன். இவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும், ஒரு தேர்தலில் கூட அவர் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட பலருடன் திமுகவில் நேற்று இணைந்தார். இந்நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்ய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டையை மாற்றுவதுபோல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள், எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். மாற்ற...
செய்திகள்தமிழகம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு தளர்வுகள்அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா மூன்றாவது அக்டோபர், நவம்பரில் உண்டாகும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகள் திறப்பதில் மேலும் சிக்கல் நீடித்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது...
செய்திகள்தமிழகம்

பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார்

பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி(84) காலாமானார். எல்கர் பரிஷத் வழக்கில் தலேஜா சிறையில் இருந்தவர் உடல்நலக்குறைவினால் காலமானார்.தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். 2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. அதோடு மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் திடீரென கைது செய்யப்பட்டார். இவர் என்ஐஏ நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர்...
செய்திகள்தமிழகம்

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை விரி

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும் என சிறு-குறு தொழில் துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய முதலமைச்சர், படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக செயல்படுத்தப்படும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உறுதிப்படக் கூறியிருக்கிறார். மேலும், சுயவேலைவாய்ப்பு திட்டங்களால் ஆதிதிராவிடர், சிறுபான்மையினர், மகளிர், பழங்குடியினர் ஆகிய பயனாளிகளின் விகிதாச்சாரம் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதேபோல் தமிழகத்தில் தொழில்வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளை விரைந்து ஆராய்ந்து அங்கு தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூரில் கட்சி...
செய்திகள்தமிழகம்

ஹரியாணாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸார் நடவடிக்கை; எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: மேலும் ஒரு நபரை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வழக்கில் கும்பல்தலைவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க 3-வதாக கைது செய்யப்பட்ட நபரை போலீஸ் காவலில் விசாரிக்க 4 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் பணம்செலுத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் சுமார் ரூ.1கோடி வரை பணம் கொள்ளைஅடிக்கப்பட்டது. சென்னையில் 15இடம் உட்பட தமிழகம் முழுவதும்21 இடங்களில் கைவரிசை காட்டிவிட்டு, தப்பிய ஹரியாணா கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை சென்னை தனிப்படை போலீஸார் ஒன்றன்பின் ஒன்றாக கைது செய்து வருகின்றனர். இதுவரை ஹரியாணாவை சேர்ந்த அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகிய 3 பேரை கைது செய்து சென்னைஅழைத்து வந்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் பல குழுக்களாக பிரிந்து கொள்ளை சம்பவத்தை...
செய்திகள்தமிழகம்

வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து நூலகம், ஆய்வரங்கம் கட்ட நடவடிக்கை: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றிக் கிடக்கும் வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து, நூலகம் மற்றும் ஆய்வரங்கம் ஆகியவை கட்டப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். அப்போது துறை செயலர் சந்தீப் சக்சேனா, தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத் ஆகியோர் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு கூறியதாவது: வள்ளுவர் கோட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இங்குள்ள 3,500 பேர் அமரும் மிகப்பெரிய அரங்கைக்கூட பராமரிக்காமல் தரைதளம், மேல்தளம், படிக்கட்டுகள் என அனைத்தும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. 5.5 ஏக்கர் பரப்புள்ள இந்த வளாகத்தில் 68.275 சதுரடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தேர், திருவாரூர் தேர் மாதிரியை வைத்து 106 அடி உயரத்திலும், சக்கரங்கள் 14 அடி...
1 419 420 421 422 423 441
Page 421 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!