தமிழகம்

செய்திகள்தமிழகம்

தமிழக மாணவி தொடர்ந்த இட ஒதுக்கீடுக்கு தடை வழக்கு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மிகவும் அடிமட்டத்தில் இருந்த காரணத்தினால், அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த...
செய்திகள்தமிழகம்

எம்.பில். படிப்புக்கு கட்டணமில்லை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

''மாணவ, மாணவியர் இலவசமாக தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.பில். படிக்க விண்ணப்பிக்கலாம்,'' என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2021- 22ம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப் பட்டியல் அமைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.தேர்வு செய்யப்படும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஜெராக்ஸ் நகல்கள்...
செய்திகள்தமிழகம்

பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தைப் பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் 'கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)' சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: ''பாஜக அரசு 'கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)' சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது. மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன்பிடித் தொழிலுக்கு இச்சட்ட முன்வரைவு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து, நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200...
செய்திகள்தமிழகம்

ஆடி 1-ல் மேட்டூர் காவிரியில் நீராட தடை

மேட்டூர் காவிரியில் ஆடி 1ல் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி 1ஆம் தேதி மேட்டூர் காவிரியில் ஏராளமானோர் நீராடி செல்வார்கள். புதுமணத்தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச்செல்வார்கள். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இதனால் அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்கவும் அணை பூங்காவை சுற்றி பார்க்கவும் வழக்கத்தை விட அதிக மக்கள் கூடுவார்கள். தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமானால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் 17.07.2021 மற்றும் 18.07.2021 ஆகிய இரு தினங்களிலும் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியீடு.: தமிழக அரசு அறிவிப்பு

வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அரசாணையில், 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 19ம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in. www.dge.tn.nic.in  என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்....
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய முடிவு…!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? என்பது குறித்து நாளை சுகாதார வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூலை 22 அல்லது அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது....
செய்திகள்தமிழகம்

என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மூத்த இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்நிலையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதேபோன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக...
செய்திகள்தமிழகம்

கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியிருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இன்று வரை உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வெள்ளக்கோயில் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள்,...
செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன். நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கைக்கு, நீட் நுழைவுத் தோவு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோவை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக நீட் தோவில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்தும் நீட் தோவு தொடா்பாக கருத்துகளை அக்குழு கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து இருந்தனா். இதனிடையே அந்த குழுவினை அமைத்ததற்கு...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் – மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். வயது முக்கியமல்ல, மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான். வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என்றும் பாஜக தனி மனிதரை முன்னிருத்தும் கட்சியல்ல, அனைவருடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். துணை தலைவராக இருந்த அண்ணாமலை, புதிய தலைவராக நியமித்ததை அடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள...
1 418 419 420 421 422 441
Page 420 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!