தமிழகம்

செய்திகள்தமிழகம்

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கம்

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில ்இருந்து தமிழகம், கர்நாடக மாநிலங் களுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து திருப்பதி, கடப்பா, சித்தூர், விஜயவாடா, பலமனேர், குப்பம், உள்ளிட்ட ஆந்திராவின் பல்வேறு நகரங்களில் இருந்து தமிழகத்தின் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகமும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகமும் பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளன. கர்நாடகா பேருந்துகள்... கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாத‌த்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் இரு மாநிலங்களுக்கு...
செய்திகள்தமிழகம்

கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கேரள எல்லையையொட்டி இருப்பதால், கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதே போல் நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு குறையவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் கேரளாவில் தினமும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கலாம். பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு விமானம் மற்றும் ரயிலில் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி...
செய்திகள்தமிழகம்

நள்ளிரவு முதல் தமிழகம் – கர்நாடகா இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை

119 நாட்களுக்குப் பிறகு தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏப்ரல் மாதம் இறுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தினமும் 450 பேருந்துகள் இயங்கி வந்தன. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினமும் 250 பேருந்துகள் தமிழகத்திற்கு இயங்கி வந்தன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசு, தமிழகத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என நேற்று அறிவித்தது. இந்நிலையில் 119 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் இருந்து இரு மாநில பேருந்து போக்குவரத்து துவங்கியதால் தினமும் பெங்களூருவிலிருந்து,...
செய்திகள்தமிழகம்

ஒரு வழியாக தமிழகத்தில் பள்ளிகள் செப் 1 முதல் திறப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, வரும் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும்போது, வரும் செப்டம்பர் 1ந்தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
செய்திகள்தமிழகம்

நம்ம சென்னைக்கு வயசு 382! – சென்னை தினம் இன்று

சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 382-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் இதையொட்டி, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த நாளை போற்றும் விதமாக சென்னை மாநகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை, நேப்பியார் பாலம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன....
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி- பாஜக நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை தீவிர ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக கடந்தஜூலை 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். பாஜக கட்சி விதிகளின்படி, மாநிலத் தலைவராக ஒருவர்நியமிக்கப்பட்டால் பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர், செயலாளர்கள், அலுவலகச் செயலாளர் போன்ற மாநில நிர்வாகிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பாஜக மாநிலத் தலைவர் பதவி என்பது 3 ஆண்டுகளைக் கொண்டது. அண்ணாமலை இடையில் மாநிலத் தலைவராகி இருப்பதால் நிர்வாகிகளை முழுமையாக மாற்றாமல் 50 சதவீதம் அளவுக்கு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். புதியவர்களை நியமிக்க திட்டம் பாஜகவை பொருத்தவரை மாநில பொதுச் செயலாளர் பதவி என்பது மிக முக்கியமானது. அவர்கள் அனைவரும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம்...
செய்திகள்தமிழகம்

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் இபிஎஸ், ஓபிஎஸ் அச்சப்படத் தேவையில்லை: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அச்சப்படத் தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும்மக்களவைத் தேர்தலுக்குள் வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டியது அவசியம். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் 5 மாநில முதல்வர்கள், 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றது, அதற்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் குறித்து நல்லவிதமாக கருத்து கூறியதை வரவேற்கிறேன். கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு இல்லையெனில் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. புலனாய்வுபோலீஸார் எத்தனை முறை விசாரித்தாலும் தங்களை அவ்வழக்கில் இணைக்க முடியாது என்றுஅவர்கள் தைரியமாக சொல்லலாமே. ஏன் பயப்படுகின்றனர்? விசாரிப்பதற்கான தேவை இருப்பதாக அரசு கருதினால் அவர்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க...
செய்திகள்தமிழகம்

நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி வரையில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாள்வதில் முறைகேடு?- நடவடிக்கை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாளப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டிபிசிஆர் கருவிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் தினமும் 1,500முதல் 2,000 மாதிரிகள் எடுக்கப்பட்டு,பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சுமார்மூன்றரை லட்சம் மதிப்பிலான ஒரு கருவியில் 4 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கருவி மூலமாக ஒரு மாதிரி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆர்டிபிசிஆர் கருவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரிக்க உத்தரவிட...
செய்திகள்தமிழகம்

நான்கு மாதத்திற்கு பிறகு ஆய்வுக்கூட்டம்… முல்லை பெரியார் அணையில் ஐவர் குழு ஆய்வு…

முல்லைப்பெரியாறு அணையில் ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வு நடைபெற்றது. துணைக் குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழக அரசு பிரதிநிதிகளான தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கேரள நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் பங்கேற்றனர். பருவமழை காலம் முடியவுள்ள நிலையில் பிரதான அணை, பேபி அணை, அணை மதகுகள் ஆகியன இதில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அணை நீர்மட்டம், மழைப்பதிவு, நீர் வெளியேற்றம், நீர்வரத்து, அணையின் கசிவு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின், மூவர் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஐவர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி துணைக் கண்காணிப்பு...
1 411 412 413 414 415 441
Page 413 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!