தமிழகம்

தமிழகம்

செப்டம்பர் இறுதிக்குள் காவிரியில் 64.62 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

காவிரியில் கடந்த 3 மாதங்களாக தரப்படாமல் உள்ள நிலுவை நீர் மற்றும் செப்டம்பர் மாதத்தின் பங்கு உள்பட 64.62 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 7 டிஎம்சி தண்ணீரை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்úஸனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் மற்றும் கர்நாடகம் சார்பில் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரியில் தமிழகத்துக்கு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கர்நாடகம் 86 டிஎம்சி...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக நடைபெறாமல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 முதல்,12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், முதலாம் ஆண்டை தவிர...
தமிழகம்

மேக்கேதாட்டு அணை: தமிழகத்துக்கு உதவுவதாக கேரள முதல்வா் உறுதி-பி.ஆா். பாண்டியன் தகவல்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவுவதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் உறுதி அளித்ததாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் கேரள முதல்வரை பி.ஆா். பாண்டியன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா். இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் கா்நாடகாவுக்கு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாா் செய்ய மோடி அரசு தன் விருப்பத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தயாா் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கா்நாடகம் அனுப்பி வைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கடந்த வாரம் கா்நாடக முதல்வா் பசவராஜ்...
தமிழகம்

விநாயகர் சதுர்த்தி : பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது....
தமிழகம்

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்- ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்: தீமையை நன்மை வெற்றி கொண்டதை கிருஷ்ண ஜெயந்தி விழா குறிக்கிறது. 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்று பகவத் கீதையில் கிருஷ்ணரால் அருளப்பட்ட அழியாத செய்தி ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. இந்த புனிதமான நன்னாளில், சமூக மேம்பாட்டுக்காக கிருஷ்ணர் அருளிய உலகளாவிய போதனைகளை பின்பற்றுவோம் என்று உறுதியேற்போம். இவ்விழா, தமிழகத்தில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு,ஆரோக்கியத்தை தரட்டும். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ண பகவான், மக்களைக் காப்பதற்காக அசுரர்களை அழித்தது போலவே, தடுப்பூசி மூலம் கரோனா எனும் நோயைஅழிக்க அனைவரும் உறுதியேற்போம். இந்த நாள் நம் அனைவர் வாழ்விலும் ஒளி...
தமிழகம்

செப்டம்பர் 1ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் தளர்வுகள் காரணமாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள சூழலில், தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய...
தமிழகம்

திடீர் கலவரம் : 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு!

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதற்கு ஒருசில மீனவ பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நல்லவாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வீராம்பட்டினம் அருகே படகில் சென்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் சுருக்குமடி பயன்படுத்த தடை உள்ள நிலையில் ஏன் மீன் பிடிக்கிறார்கள் என்று வீராம்பட்டினம் மீனவர்கள் கேள்வி கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அங்கு கலவரம் வெடித்தது. நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பெரிய படகின் மூலம் வீராம்பட்டினம் மீனவர்களின் படகை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரும்பு, கத்தி உள்ளிட்ட...
தமிழகம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 33 ஆசிரியர்கள் தாமதமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உடல் நல சூழலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்கள், அதற்குரிய மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் கட்டித்தரப்படும், குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ஒதுக்கீடு, வாழ்க்கை தரம் மேம்பாடு நிதி ஆண்டுதோறும் 5 கோடி, 300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக 6.16 கோடி ஒதுக்கீடு, விலையில் எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளை மானியத்திற்கு 10.50 கோடி ஒதுக்கீடு என பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இலங்கை தமிழர்...
தமிழகம்

சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதை நிறுத்த நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னையைச் சுற்றியுள்ள 5 இடங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுங்கச்சாவடிகளில் வசூலை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர் பேசும்போது, ''தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்'' என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ''தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெம்மேலி, சென்னசமுத்திரம், சூரப்பட்டு மற்றும் வானகரத்தில் அமைந்துள்ள...
1 409 410 411 412 413 441
Page 411 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!