தமிழகம்

தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு; வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தனி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆயினும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச...
தமிழகம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்: அரசின் அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறி விக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் பக்தர்கள் வருகை மற்றும் அதிக உண்டியல் காணிக்கையில் சமயபுரம் கோயில் 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ரங்கம் ரங்கநாதர் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை 13.09.2012-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது வரை நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பக்தர்கள் அதிக அளவில் வரும் சமயபுரம் கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க வேண்டும் என பல்வேறு...
தமிழகம்

தமிழகத்தில் தடை: இன்று முதல் அமல்!

சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் சுற்றுலா தலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தடை என தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று முதல் அமல் படுத்தப் படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் மூன்றாவது அறையை தடுப்பதற்காக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன அதன்படி சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்களுக்கு ஞாயிறன்று அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வெள்ளி சனி ஞாயிறு வழிபாடு தளங்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனுமதி இல்லை என்றும் அது இன்று முதல் அமல்...
தமிழகம்

அரசு மற்றும் தனியார் நிலங்களில் ரூ.50 கோடியில் நாட்டு மரக்கன்று நடும் திட்டம்: சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.50 கோடி செலவில் மண் சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில்அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், எக்காரணம் கொண்டும்தொழிற்சாலை கழிவுநீரை கடலிலோ, ஆற்றிலோ கலக்கவிடக் கூடாது என்று ஆலை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈரோடு, நாமக்கல் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 10 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பனைமரங்கள் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அதன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். புதிய பசுமை திட்டங்களை கண்டறியவும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக...
தமிழகம்

எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்லம் மற்றும் அலுவலகம் என சுமார் 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்தில் 12 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கி லாக்கர் சாவியை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் எஸ்.பி. வேலுமணியிடம் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று...
தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பின்னர் வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கோடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர...
தமிழகம்

சிறப்பு வழிகாட்டி குழு… கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிபில், மத்திய அரசின் ஆதரவோடு, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை "அனைவருக்கும் நல்வாழ்வு மையங்கள்" ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 622 தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 4 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் நவீன கர்ப்பத்தடை தடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு...
தமிழகம்

இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.. வைகோ கோரிக்கை.!!

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள் கட்டித்தருதல், முகாம்களில் மின் வசதி, குடிநீர், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகள், நிகழும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட இருப்பது, மகிழ்ச்சி அளிக்கின்றது. அதேபோல, அவர்களது குடி உரிமை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல் அமைச்சர் அறிவித்து இருக்கின்றார். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில்...
தமிழகம்

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு, செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே தேதியில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் நடைபெறுகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல்...
தமிழகம்

சிலைகளுடன் திடீர் போராட்டம் எதிரொலி – தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை

வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளுடன் சிலர் திடீர் போராட்டம் நடத்தியதால், சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். கரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக, இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலைகளுடன் போராட்டம் நடத்தினர். தனியார் வாகனங்களில் சிலைகளை எடுத்து வந்து, கலைவாணர் அரங்கம் எதிரே இறங்கி, சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். போலீஸார் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த போராட்டம் நடந்தது. இதுபோல, திடீர் போராட்டங்கள் நடக்கவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். குறிப்பாக கலைவாணர் அரங்கத்தைச்...
1 408 409 410 411 412 441
Page 410 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!