தமிழகம்

தமிழகம்

இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. 4 நாட்களுக்கு மழை தொடரும் என முன்னறிவிப்பு !!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.30) முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும். நாளை (அக்.1) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும் மிதமான...
தமிழகம்

காவல் நிலையத்தில் எஸ்.ஐ., இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தர்மபுரி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில், நேற்றிரவு திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஸ்டாலினின் கார் சென்றது.காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், போலீசாருக்கு வார விடுப்பு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்த ஸ்டாலின், போலீசாரின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்...
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் பொது விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதரமாவட்டங்களில் காலியாக உள்ளஉள்ளாட்சி பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற...
தமிழகம்

பணிநிரந்தரம் கோரி செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டம் – குண்டுக்கட்டாக வெளியேற்றம்

பணிநிரந்தரம் கோரி, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினர். முன்னதாக போராடியவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற செவிலியர்களை, கொரோனா காலத்தில் 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு பணி நியமனம் செய்தது. பின்னர் கொரோனா 2வது அலை பரவல், 3ஆவது அலை எச்சரிக்கை காரணமாக அவர்களுக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பணி நியமன ஆணை பெற்ற 2 ஆயிரத்து 750 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3...
தமிழகம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் டெல்லியில் நேற்று மாலை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை சந்தித்து சில திட்டங்கள் குறித்து பேசினோம். குறிப்பாக நாட்டில் அமைக்கப்பட உள்ள 7 புதிய ஜவுளி பூங்காக்களில் 2 ஜவுளி பூங்காக்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என கேட்டோம். நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை எடுத்துரைத்தோம். சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பதையும், நீதி...
தமிழகம்

கலவரத்தில் பொது சொத்துகளுக்கு சேதம்; பாமகவிடம் இழப்பீடு வசூலிக்க சட்ட ரீதியாக தடை இல்லை: கட்சித் தலைவர் ஜி.கே.மணி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பொதுசொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை வசூலிப்பதற்கான விசாரணைக்கு ஆஜராகுமாறுபாமக தலைவர் ஜி.கே.மணிக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.25-ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த கலவரம் காரணமாக பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2013 ஏப்.25 முதல் மே 19 வரை பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர், நோட்டீஸ்...
தமிழகம்

தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே நாளில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டுதடுப்பூசிகள் போடப்படுகின்றன. கரோனா3-வது அலை எச்சரிக்கை இருப்பதாலும்,கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் நடந்த முதல் சிறப்பு முகாமில் 28. 91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக கடந்த 19-ம் தேதி 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 16.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள்,...
தமிழகம்

ஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி. கவுன்சில் சீர்த்திருதக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று மாநில சுயாட்சிக் கோட்பாட்டை அவர் வலியுறுத்தியது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. கடந்த 17-ந் தேதி லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அண்ணாமலை ஒரு...
தமிழகம்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்னாமலை, திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற 26-ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி...
தமிழகம்

திருப்பதியில் சர்வ தரிசன டிக்கெட் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம்: தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் கைது

திருப்பதியில் சர்வ தரிசன டிக்கெட் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக பக்தர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை இரவு முதல் தினந்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப் பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு தினந்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டம் வருவதை தவிர்ப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் அடுத்தடுத்த நாட் களுக்கு உண்டான டிக்கெட்களை தொடர்ந்து வழங்கி வந்தனர். நேரடியாக வந்து டிக்கெட் பெறுவதற்காக கூட்டம் சேருவதைத் தவிர்க்க ஆன்லைனில் தினந்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் என இலவச தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு நாளை 26-ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவதாக...
1 403 404 405 406 407 441
Page 405 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!