தமிழகம்

தமிழகம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்..!!

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பிறைசூடன் பிறந்தார். 1985-ல் வெளியான 'சிறை' படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த 'ராசாத்தி ரோசாப்பூ' என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை இவர் எழுதியுள்ளார். பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய 'நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்', செம்பருத்தி திரைப்படத்தில் 'நடந்தால் இரண்டடி' உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ள பிறைசூடன், தற்போது வரை தனது எழுத்துப்பணியை தொடர்ந்து வந்துள்ளார். சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் அவர் இடம்பெற்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று...
தமிழகம்

கோயில் இடங்களுக்கான வாடகையை இணையதளம் மூலம் செலுத்தலாம்: அறநிலையத் துறை புதிய வசதி அறிமுகம்

கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில்செலுத்தும் வசதியை இந்து சமயஅறநிலையத் துறை தொடங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய வசதியை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோயில் நிலங்களின் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை,குத்தகை தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணைய வழியில் செலுத்த முடியாதவர்கள் கோயிலுக்கு நேரில் சென்றும் கட்டலாம். வாடகை, குத்தகை செலுத்த மாதம்தோறும் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தற்போது 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில் இடங்களுக்கு நியாயமான வாடகை...
தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்... இதையடுத்து, தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது... கடந்த வாரம் முழுவதும் மழை பொழிவு இருந்த நிலையில், இந்த வாரமும் மழை பெய்து வருகிறது. தற்போது தொடர்ந்து 3 நாளைக்கு மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் - தமிழகத்தில் 5 நாட்களுக்கு அடி வெளுக்கப்போகும் மழை தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும், நாளையும் வட...
தமிழகம்

கோவில்களை திறக்காவிட்டால் அரசை ஸ்தம்பிக்க செய்வோம்: அண்ணாமலை

'பத்து நாட்களில் கோவில்களை திறக்காவிட்டால், அரசை ஸ்தம்பிக்கச் செய்வோம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழகத்தில், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோவில்கள் முன் போராட்டம் நடந்தது.சென்னை, மண்ணடி காளிகாம்பாள் கோவில் அருகே நடந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அதில், பா.ஜ.,வினர் தீச்சட்டி ஏந்தியும், தேங்காய் உடைத்தும், கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.பின், அண்ணாமலை அளித்த பேட்டி:ஆளுங்கட்சியின் நல்ல விஷயங்களுக்கு, எதிர்க்கட்சியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அவர்கள் சித்தாந்தத்தை, கோவில் மற்றும் பூஜை அறைகளில் திணிக்க முயலும் போது; இல்லாத கொரோனாவை காரணம் காட்டி, நம் உரிமையை...
தமிழகம்

தேர்தல் பணி செய்யவிடாமல் அதிமுகவினருக்கு மிரட்டல்: ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்

உள்ளாட்சித் தோதல் பணிகளைச் சரிவர செய்யவிடாமல் அதிமுகவினரை காவல்துறையினா் மூலம் திமுக மிரட்டுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம் சாட்டியுள்ளனா். இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கை: ஊரக உள்ளாட்சித் தோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறையையும், அரசு ஊழியா்களையும் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு அதிமுகவினரை மிரட்டி தோதல் பணிகளைச் செய்யவிடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. அதிமுகவினா் மீது பொய்யான வழக்குகளையும் பதிவு செய்து அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் எப்போதுமே அதிமுகவின் கோட்டை. அந்தப் பகுதியில் அதிமுகவைச் சோந்த பெரும்பாக்கம் ராஜசேகரும் அவரது குடும்பத்தினரும் தொடா்ந்து வெற்றிபெறுவது வழக்கம். அவா்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோல பல்வேறு இடங்களிலும் அதிமுகவினருக்கு...
தமிழகம்

மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச் சென்றபோது தோணி மூழ்கியது- நடுக்கடலில் தத்தளித்த 9 தொழிலாளர் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்றதோணி நடுக்கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த 9 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி காந்தி நகரைச்சேர்ந்த வெலிங்டன் என்பவருக்குசொந்தமான 'அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா' என்ற தோணி, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சிமென்ட், காய்கறிகள் உள்ளிட்ட 287 டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டது. இந்த தோணியின் மாஸ்டராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (40) என்பவர் இருந்தார். தொழிலாளர்களாக மரிய அந்தோணி (23), சிரான் (26), சீலன் (25), மில்டன் (50), நாராயணன் (61), அடைக்கலம் (63), வெசேந்தி (61), தொம்மை (63) ஆகிய 8 பேரும் சென்றனர். இந்த தோணி நேற்று முன்தினம் காலை மாலத்தீவு அருகே சுமார் 250 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதால், தோணியை...
தமிழகம்

அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, மனிதர்களையும், விலங்குகளையும் வேட்டையாடி வரும் புலியை, விலங்குகளின் உடல் வெப்ப நிலை மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை...
தமிழகம்

நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு பெய்யக்கூடும்

நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " 6.10.21 நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அமையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கக்கூடும் 7.10.21 வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 8.10.21 தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிந் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 9.10.21...
தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களில் 39 ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாளஅட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் உரிய பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை...
தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம்: காவல் ஆணையர் எச்சரிக்கை

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் வசூலிப்போரை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அண்மைக்காலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை டிபிஐ வளாகத்துக்கு வரவழைத்து, போலி பணி நியமன ஆணை வழங்கி சிலர் மோசடியில் ஈடுபட்டனர். இதேபோல, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தியும் மோசடி நடந்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ``அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என்று கூறியும், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களைக்...
1 401 402 403 404 405 441
Page 403 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!