தமிழகம்

தமிழகம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக: முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதில்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் செய்யவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 1980-களில் தனி ஈழத்துக்காக நடைபெற்ற போர் உச்சத்தில் இருந்தபோது, அதிமுகவும், எம்ஜிஆரும் இலங்கைத் தமிழர்களுக்கு பல வழிகளில் உறுதுணையாக இருந்தது உலகுக்குத் தெரியும். அந்த நேரத்தில், டெசோ, டெலோ போன்ற அமைப்புகளை நிறுவி, இலங்கைத் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது யார் என்பதையும் மக்கள் நன்கறிவார்கள். இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தபோது, அவர்களைப் பாதுகாத்தது எம்ஜிஆர் அரசும், தொடர்ந்து ஜெயலலிதா அரசும்தான் என்பதை முதல்வர் மறைத்துவிட முடியாது. திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம், இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. 2009-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, 7 மணி நேர உண்ணாவிரதம் நடத்தினார். அவர் கூறியதை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து...
தமிழகம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3,640 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து இன்று 3,640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (04.11.2021) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் இருந்து நேற்று முன்தினம் முதல் 10,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கூடுதலாக 388 சிறப்பு பேருந்துகளும், நேற்று 1,575 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீபாவளியன்று சொந்த ஊர்களில் இருப்பதற்கு ஏதுவாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட...
தமிழகம்

இவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.. அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆதார் இன் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை கடன் (5 சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர் மற்றும் அவரது குடும்பத்தினர்,...
தமிழகம்

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டத்தில் எல்லாம் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 5ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல்‌ மற்றும்‌ இலங்கையை ஓட்டி நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்க அடுத்த 48 மணி நேரத்தில்‌ தென்‌கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிக்கு நகரக்‌ கூடும்‌. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்‌தில்‌ வடக்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இதன்‌ காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கனமழையும்‌, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தென்காசி, ராமநாதபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌...
தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.  தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்து களும் இயக்கப்படுகின்றன. இதற்காக சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் நவ.1 முதல் 3 வரை இயக்கப்படும். சென்னையில், கே.கே. நகா் பேருந்து நிலையத்தில் இருந்து, இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக, திருவண் ணாமலை, போளூா், சேத்துபட்டு,...
தமிழகம்

நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும். இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன, மிக கன மழை பெய்யும். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், பெரும்பாலான...
தமிழகம்

இங்கிலாந்தில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக நாளை தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்: சீமான்

இங்கிலாந்து வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக தமிழர்கள் நாளை ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகிற 01.11.2021 திங்கட்கிழமை அன்று, பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் நடக்கவிருக்கிற சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோத்தபய ராஜபக்சே வருகிறார்கள் என்ற செய்தி நாம் எல்லோரும் அறிந்ததுதான். இன்றைக்கு இலங்கை நாட்டினுடைய அதிபராக இருக்கின்ற அவர், நம் இனத்தை அழித்தொழிக்கிற இறுதிக்கட்ட போரின்போது பாதுகாப்புத்துறை, இராணுவ அமைச்சராக இருந்தார் என்பதும் நாம் அறிந்ததுதான். திட்டமிட்டு நம் இனத்தைப் படுகொலை செய்த சிங்களவர்களில், குறிப்பாக மகிந்தா ராஜபக்சே, கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும்பங்காற்றினர். உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும், துணையையும் பெற்றுக்கொண்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கும்...
தமிழகம்

பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல.. தமிழ்நாடு நாள் விவகாரத்தில் ராமதாஸ் கருத்து

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் நாள் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு நாள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவு கூறும் நாள் தானே தவிர, தமிழ்நாடு நாள் அல்ல; மாறாக 1967-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 ஆம் நாள் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு நாள் என்றைக்கு கொண்டாட்டப்பட வேண்டும் என்பது குறித்து...
தமிழகம்

சரவெடிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை

சரவெடிகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீட்டிக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் என கருத்துக் கூறிய உச்சநீதிமன்றம், உத்தரவு கட்டாயம் கடைபிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 2017, 2018 ஆம் ஆண்டு உத்தவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், வழங்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அதாவது காலை 6-7, இரவு 7-8 மணி வரையிலும் வெடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து, கூடுதல் கால அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பேரியம் உப்புகள் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கவும் தடை, சரவெடி தயாரிக்க மற்றும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி, தயாரிப்பு...
1 396 397 398 399 400 441
Page 398 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!