தமிழகம்

தமிழகம்

ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா – தஞ்சை பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா இன்று நடைபெறுகிறது. பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பேரபிஷேகம் மட்டுமே நடைபெற உள்ளதால் சதய விழாவிற்கு வருகை தருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டி உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். ராஜராஜன் சோழன் ஐப்பசி மாதம் சதய தினத்தன்று பிறந்தார் என்பது வரலாறு. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டியம் கலை நிகழ்ச்சி பட்டிமன்றம் ராஜராஜசோழன் விருது வழங்கும் விழா திருவீதி உலா என வெகு...
தமிழகம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் – 4 நாட்களுக்கு கனமழை – குமரி, நீலகிரியில் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இன்று காற்றழுத்தமாக மாறி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய ஒட்டு மொத்த மழையும், இந்த 11 நாட்களில் கூடுதலாகவே பெய்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன....
தமிழகம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு

தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரையில், இது குறித்து குறிப்பிடுகையில் "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்" என்று ஆளுநர் அறிவித்திருந்தார். அதன் பின்னர், நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில்...
தமிழகம்

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்!!

மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 6ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. சாலைகளில் தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ...
தமிழகம்

சென்னையில் 11 சுரங்கப் பாதைகளை மூடியதால் நூற்றுக்கணக்கான பேருந்து சேவை பாதிப்பு

கனமழையால் சென்னையில் நேற்று 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், சென்னையில் பெரும்பாலான வழித்தடங்களில் நேற்று காலை முதல் குறைந்த அளவிலேயே மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சில வழித்தடங்களில் பேருந்துகள் காலியாகவே சென்றன. மதியத்துக்குப் பிறகு பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்றாற்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. கனமழை காரணமாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல், மழைநீரால் சென்னையில் சுரங்கப் பாதைகள் நிரம்பின. எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வியாசர்பாடி, கணேசபுரம்,...
தமிழகம்

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதன்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களுக்கு அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.11-ஆம் தேதி காலை...
தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறும். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கொடியேற்று விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. எனவே, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படும்.  ...
தமிழகம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று (08.11.2021) மாலை 6.00 மணிக்கு திறந்துவிடப்படுகிறது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள்...
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது, முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புறமுள்ள கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார். நாளை மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் கோயிலில் நடக்கிறது. இரவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.  ...
தமிழகம்

“திடீர் மழைப்பொழிவுக்கு இதுதான் மிக முக்கியமான காரணம்” – நவ.6 மழை குறித்து ரமணன் விளக்கம்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாகவே அதீத மழை பொழிவு இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே இரவில் சுமார் 20 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் 2015-இல் சென்னையில் பொழிந்த மழை, 2018-இல் கேரளாவில் பதிவான மழை, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழை என வழக்கத்திற்கு மாறாக மழை பொழிவு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதற்கான தீர்வு தான் என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான விளக்கத்தை இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'நேர்படப் பேசு' நிகழ்ச்சியில் 'தொடரும் பெருமழை.. வடியாத தண்ணீர்.. எங்கே தவறு? என்ன தீர்வு?'...
1 394 395 396 397 398 441
Page 396 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!