செய்திகள்

தமிழகம்

வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பேச்சு போட்டி பரிசளிப்பு விழா

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்தது.  இதில் சத்துவாச்சாரி வ.ஊ.சி.நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் லிங்கேஸ்வரன் முதல்பரிசும், வித்யா நிகேதன் பள்ளி மாணவிமோனிஷா 2-ம் பரிசும், 3-ம் பரிசு முறையே அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி காவ்யா, வ.ஊ.சி.பள்ளி மாணவி வனிதாவும்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

வேலூருக்கு வருகை தந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீஸ்வர்ணலட்சுமிக்கு ஆராதனை செய்து வழிப்பட்டார்.பின்பு தங்க கோயிலை பார்வையிட்டார். உடன் கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு இருந்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘பதிப்பியல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 18, 2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கத்தில் உள்ள DLR கலை & அறிவியல் கல்லூரியின் மாணவ மாண்வியர்களுக்கு 'பதிப்பியல்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் க.மணிஎழிலன் அவர்கள் 'பதிப்பியல்' பற்றி இரண்டு மணி நேரம் கருத்தரங்க உரையாற்றினார். பதிப்பகம் என்றால் என்ன?, ஏன் பதிப்பகம் மூலம் நூல்களை பதிப்பிக்க வேண்டும், ஐ.எஸ்.பி.எண். என்றால் என்ன? அது எதற்கு பயன்படுத்துகிறோம்? போன்ற...
தமிழகம்

2 அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏக்கள்…கட்சி பேதங்களை கடந்து களைக்கட்டும் ‘ஈஷா கிராமோத்சவம்’!

கிராமப்புற மக்களின் நலனுக்காக ஈஷா நடத்தும் ‘ஈஷா கிராமோத்வம்’ விளையாட்டு திருவிழாவில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி செப்.23-ம் தேதி வரை 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை...
தமிழகம்

77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானது

இந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று நாடெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரத் தினத்தையொட்டி சென்னை வானொலியில் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் கடந்த ஆகஸ்ட் 11 அன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கவிஞர் மு.முருகேஷ் தலைமையில் ‘பட்டொளி வீசும் பாரதக்கொடி’ எனும் தலைப்பிலான சிறப்புக் கவியரங்கம், வானொலி நிலையத்தின் நாடக ஒலிப்பதிவரங்கம் - 1-இல் பார்வையாளர்கள் கூடிய அரங்கில் பதிவு செய்யப்பட்டது. இக்கவியரங்கில்,...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகம், சார் – பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இந்தியாவின் சுதந்திரதின விழா முன்னிட்டு தேசிய கொடியை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில் தலைமை இடத்து துணைத் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.  காட்பாடி சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் சார் - பதிவாளர் கவிதா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். முன்னாள் பொறுப்பு சப்-ரிஜிஸ்தார்...
தமிழகம்

ஆந்திரா எல்லை அருகே கடத்த 22 ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வேலூர் பறக்கும் படை தாசில்தார்

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் உணவு பாதுகாப்பு பறக்கும் படை தனி தாசில்தார் விநாயமூர்த்தி தலைமையிலான குழுவினர் காட்பாடி தாலுகா பொன்னை அருகே ஆந்திர-தமிழ்நாடு எல்லையான சீனிவாசபுரம் கிராமத்தில் சாலை ஓரமாக ஆந்திராவிற்கு கடத்த இருக்க 22 ரேசன் அரிசி மூட்டைகள் (சுமார் 704 கிலோ) பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். உடன் உதவியாளர் திவாகர் உள்ளார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் கொசப்பேட்டை ஸ்ரீஆணைக்குளத்தம்மன்கோயிலில் பால்குட ஊர்வலத்தை துவக்கிய வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் கொசப்பேட்டையில் உள்ள கிராம தேவதையான ஸ்ரீ ஆணைக்குளத்தம்மன் கோயிலில் 5-ம் வெள்ளியை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அம்மனுக்கு தீபராதனை செய்தபின் பக்தர்களின் பால்குட ஊர்வலத்தை துவக்கிவைத்தார். உடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மற்றும் பலர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வந்த தமிழக கவர்னர் மனைவிக்கு சக்தி அம்மா ஆசி

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயிலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி வருகை தந்து தங்க கோயிலை பார்வையிட்டார். பின்பு சக்தி அம்மா சந்தித்து ஆசி பெற்றார்.  உடன் ஸ்ரீ நாராயணி பீட மேலாளர் சம்பத் இருந்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

சென்னையில் நடைப்பெற்ற ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுடைய 55வது பிறந்தநாள் சென்னை அரும்பாக்கம் மார்க்கெட் அருகில் தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் திரு.வசீகரன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினார். இந்த விழாவில் ஏராளமான பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஆம் ஆத்மி...
1 91 92 93 94 95 599
Page 93 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!