செய்திகள்

இந்தியா

166 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை : ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா இன்று (செப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார். ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று (செப்.1) ஜெயா வர்மா ரயில்வே வாரியத் தலைவராக...
தமிழகம்

அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவியாக இந்திரா நியமனம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த திருமதி வி. இந்திரா, அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆகவே அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அவருக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று அவர்...
தமிழகம்

மகா கவிதை : கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39ஆம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக ‘மகா கவிதை’ அறியப்படுகிறது. தமிழில்...
தமிழகம்

பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. என்னையும், எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். பிரக்ஞானந்தாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி தனது  X பக்கத்தில் உங்களையும், உங்களது...
தமிழகம்

செஸ் போட்டி: ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 மாணவர்கள் சிறப்பிடம்

ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 கிராமப்புற மாணவர்கள் கோவையில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கோவை மேற்கு குறு மைய பள்ளிகளுக்கான செஸ் போட்டி கல்வீரம்பாளையம் அரசு பள்ளியில் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர். போட்டியின் முடிவில்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் : ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா பங்கேற்பு

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக உடல் உறுப்புதான தினம் அங்குள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடந்தது.  இதில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா மற்றும் கணவரும் திரைப்பட இயக்குநரான ஆர். கே.செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.  மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தலைமை தாங்கினார். வேலூர் மேயர் சுஜாதா, மருத்துவமனை...
தமிழகம்

நேற்று இரவு தெரிந்தது சூப்பர் ‘ ப்ளூ மூன் ‘

சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று புதன்கிழமை இரவு 8.37 மணிக்கு விண்ணில் தெரிய துவங்கியது.  பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர்.  வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட இன்றைய தினம் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்பட்டது. வேலூரில் எடுத்த சூப்பர் ப்ளூ மூன் செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சார்பில் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் களிடம் வழங்ககோரி தமிழக முதல்வரிடம் மடியேந்தி போராட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர்கள் விஜயலட்சுமி, புவனேஸ்வரி, தமிழ்செல்வி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ருகமணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஏழுமலை விளக்கவுரையாற்றினார்.  ஆண்டாள், சுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க செயற்குழுக் கூட்டம்

வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் (புருஷோ) சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.  தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் நிர்வாகிகள் மோகன், லட்சுமணன், சரவணன், வாரியார், ஞானவேலு, ரவி, துரைராஜ், அப்பர், குமார், செந்தில், சுரேஷ், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

SDPIகட்சியின் கிருஷ்ணகிாி மேற்கு மாவட்ட சாா்பாக Ms.சினேகா திவாகரன் IAS, ஓசூா் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது

SDPI கட்சியின் சாா்பில் ஓசூா் மாநகரம் முழுவதும் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அன்றாடம் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை நிலவுகின்றது அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் வாசவி நகா் பகுதியில் ஒரு சிறுமி பாதிக்கப் பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பீதி மற்றும் பயம் இல்லாமல் வாழ மாநகராட்சி நிா்வாகம் ஓசூா் மாநகரம் முழுவதும் தெரு நாய்களை கட்டுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கை ஓசூர் மாநகராட்சி ஆணையர்...
1 87 88 89 90 91 599
Page 89 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!