செய்திகள்

தமிழகம்

வேலூருக்கு அமைச்சர் செஞ்சிமஸ்தான் வருகை

வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சிறுபான்மை மற்றும் அயல்நாட்டு தமிழர் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சிமஸ்தானை வரவேற்ற வேலுார் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அருகே அதிரடி மீண்டும் ஆந்திராவிற்கு கடத்த இருந்த 710 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : பறக்கும் படை தாசில்தார் அதிரடி

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் டிரைவர் உதவியுடன் பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் உணவு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.  நேற்று முன்தினம் இரவு பொன்னை அடுத்த கீரை சாத்து பஸ்...
தமிழகம்

வேலூரில் நாட்டை காப்போம் கூட்டமைப்பின் சார்பில் பரப்புரை மற்றும் கலைப்பயணம் குறித்த ஆலோசனைக்கூட்டம்

வேலூர்பில்டர் பெட்ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஹாலில் நாட்டைக் காப்போம் என்ற நிலையில் தமிழகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் கலைப்பயணத்தை மேற்கொள்வது என்றும் இதில் சென்னை, வேலூர்,நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, உதகை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு அக்டோபர் 2-ம் தேதி புறப்பட்டு, 17-ம்...
தமிழகம்

வேலூரில் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு

வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் வரும் 17-ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பவளவிழா நடைபெற உள்ளது.  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அழைப்பிதழை கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சென்னையில் கொடுத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பூமியின் பசுமையை பாதுகாக்க ஒரு கோடி மரம் உருவாக்கியே தீருவோம்; உறுதி ஏற்ற சமூக ஆர்வலர்கள்

பூமியின் பசுமையை பாதுகாக்க ஒரு கோடி மரத்தை உருவாக்கியே தீருவோம் தென்காசி வெங்கடாம்பட்டி பூ. திருமாறன், டாக்டர். விஜி, பாலு உள்ளிட்ட ஆகிய சமூக இயற்கை ஆர்வலர்கள் உறுதி ஏறறனர். இது பற்றி வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் கூறியிருப்பதாவது, காவல் துறையை விட ராணுவத்தை விட மிகப் பெரிய படை மாணவர் படை. அந்த அபார படைக்கு பொறுப்பாய் திகழும் ஆசிரியர்கள் மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து உலக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும்...
தமிழகம்

ஒசூரில் ம.ஐ.க. ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர பத்தலபள்ளி கிளையில் மஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளரும் ஊராட்சிமன்ற உறுப்பினருமான முஹம்மத் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகின்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து...
தமிழகம்

காட்பாடி அருகே ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை வட்டாச்சியார்

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப் படி வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயமூர்த்திக்கு வந்த ரகசிய தகவலில் காட்பாடி தாலுகா பொன்னை கீரை சாத்து பஸ் நிறுத்தத்தில் இரவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஓட்டுநர் உதவியுடன் பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை மோட்டூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காரணத்தினால் பொதுமக்கள் இரவு நேரங்களில் யாரும் வெளியே வருவதை தவிர்க்கும்படி ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்து உள்ளார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலுார் அடுத்த பள்ளிகொண்டா கந்தநேரி மணல் குவாரியில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.  இந்த மணல் குவாரியை புதுக்கோட்டைய சேர்ந்த கரிகாவலன், ராமச்சந்திரன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியல், குவியலாக குவிக்கப்பட்டு விற்பனை செய்துவருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.  அதன்படி அதிகாரிகள், துணை ராணுவ படையுடன் செவ்வாய்கிழமை காலை அதிரடியாக நுழைந்து அங்குள்ள அலுவலகம், குவாரியில் சோதனை...
தமிழகம்

வேலூர் அதிமுக மாநகர அலுவலகத்தில் செயலாளர் அப்புதலைமையில் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட மாநகர அதிமுக காட்பாடி காந்திநகரில் உள்ள அலுவலகத்தில் வரும் 15-ம் தேதி அண்ணா பிறந்த கொண்டாடுவது குறித்தும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாளர் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
1 82 83 84 85 86 599
Page 84 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!