செய்திகள்

தமிழகம்

காட்பாடியில் இராம பக்தனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இராம பக்தன் அனுமானுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தை கோயில் பட்டாச்சாரியார் கண்ணன் செய்து இருந்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அருகே பொன்னை பகுதியில் ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் பறக்கும் படையினர் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரை சாத்து ஆந்திர சோதனை சாவடி அருகில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கோட்பாரற்று கிடந்த 400 கிலோ எடை உள்ள ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் டி.செங்குட்டுவன் முன்னிலையில் நடந்தது.  மாநில தலைவர் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. கதிர் ஆனந்த் தலைமை தாங்கி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  துணை செயலாளர்கள் தினகரன், உதயசூரியன், பூபதி, செல்லத்துரை, ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் (82) இன்று மாலை காலமானார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் வழிபடலாம் என்று அறிவித்தவர் பங்காரு அடிகளார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி தாலுகா பொன்னையாற்றில் ரூ 62 கோடியில் தரைப்பாலம், தடுப்பணை கட்டும் பணி: அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பரமசாத்து மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே நபார்டு நிதியுடன் கட்டப்பட்டுவரும் தடுப்பணை, மேல்பாடி பொன்னை ஆற்று தரைப்பாலம், குகையநல்லுர் பொன்னை ஆற்றில் தடுப்பனை என ரூ. 62.80. கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உடன் தலைமை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர். செய்தியாளர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 2-நாட்களாக குப்பை அள்ளும் பணியை நிறுத்தி போராட்டம்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து 18, 19 தேதிகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  நேற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. 19-ம் தேதி வியாழக்கிழமை சில அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்பட இல்லை.  கடந்த நாட்களாக மாநகராட்சி பகுதியில் குப்பை கூளங்கள் குவிந்து உள்ளன. மாநகராட்சி நேரடியாக துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகள்...
தமிழகம்

குடியாத்தத்தில் பாலியல் தொல்லை தந்த சாம்பிராணி புகைபோட்ட சித்தூர் ஆசாமி போக்ஸோவில் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சித்தூர் பகுதியை சேர்ந்த பாஷா என்பவன் அங்குள்ள கடைகளில் சாம்பிராணி புகை போடும் வேலையை செய்து வந்தான். அங்குள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகைப்போடும் போது அங்கிருந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளான். சிறுமிமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தொல்லை தந்த பாஷாவை குடியாத்தம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். செய்தியாளர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த சுகாதார துணை இயக்குநர்

வேலூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் பானுமதி மாநகராட்சி பகுதியான 12-வது வார்டு அருப்பு மேடு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்தார்.  பூச்சியியல் வல்லுநர் காமராசு, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொது சுகாதார மேலாளர் சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் மூடப்படாத கழிநீர் கால்வாய் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது மண்டலம் வள்ளிமலை ரோட்டில், வேலூரை நோக்கி செல்லும் பஸ் நிலையம் பின்புறத்தில் (நிழற்கூடம் இல்லாத திறந்தவெளி பஸ் நிலையம்) கடந்த ஒரு வாரத்திற்கு முன் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் மண் அங்கேயே எடுத்துப் போடப்பட்டு துர்நாற்றம் தொடர்ந்து அடித்து வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்கள், பயணிகள் முகம் சுளித்து நிற்கிறார்கள், செல்கிறார்கள். அந்த பள்ளத்தில் யாராவது...
தமிழகம்

ஈஷாவில் உமா நந்தினியின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி : நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாடிய பெருமைக்குரியவர்

ஈஷா நவராத்திரி விழாவின் 3-ம் நாளான இன்று (அக்.17) நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய பெருமைக்குரிய செல்வி. உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும்...
1 73 74 75 76 77 599
Page 75 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!