தமிழகம்

செய்திகள்தமிழகம்

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2000-ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர்...
செய்திகள்தமிழகம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9-ம் தேதி மதுரை கே.கே. நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்...
செய்திகள்தமிழகம்

சென்னையில் 55 அடி உயரத்தில் 75-வது சுதந்திர தின நினைவு தூண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் 75-வது சுதந்திர தின நினைவுத் தூணை, வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது. அதையடுத்து டெண்டர் விடப்பட்டு, ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3-ம் தேதி பணிகள் தொடங்கியது. முதல்வர் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. 'நினைவுத் தூணின் அடித்தளம் 10 அடி நீளத்திலும், 10 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 55 அடி உயரம் கொண்ட நினைவுத் தூணை...
செய்திகள்தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் இன்று தாக்கல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். முன்னதாக, தொழில், வணிகத் துறையினர் உட்பட பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 11-ம் தேதி ஆலோசனை நடத்தி, பட்ஜெட்டை இறுதி செய்தார். முதல்முறையாக...
செய்திகள்தமிழகம்

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கோவில்பட்டி புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. இப்பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. கல்வி நிலையங்களும் அதிகம் உள்ளன. கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகம், மாவட்ட தலைமைஅரசு மருத்துவமனை, செயற்கைபுல்வெளி ஹாக்கி மைதானம்போன்றவை ஏற்கெனவே கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கரநான்குவழிச் சாலையில் கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் கோவில்பட்டி ரயில் நிலையம் 2-வது இடத்தில் உள்ளது. கழுகுமலை, எட்டயபுரம், வைப்பாறு ஆகிய சுற்றுலா தளங்கள் உள்ளன. கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் என 5 வட்டங்கள் உள்ளன.விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு கோட்டம், புதூரைதலைமையிடமாக கொண்டு வட்டம் அமைத்து, கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க...
செய்திகள்தமிழகம்

பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்துவதற்கு தடை: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா தொற்றை கட்டுப்படுத்த திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை https://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமர வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று அதற்கான விருதும் பரிசுத் தொகையும் தமிழக முதல்வரால் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும், நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பாராட்டி நகர்புற வளர்ச்சி துறை சார்பில், தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் சிறந்த மாநகராட்சிக்கான விருது...
செய்திகள்தமிழகம்

ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரம் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான மொஹரம் வரும் ஆகஸ்ட் (20.08.2021) அன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்து உள்ளது. மொஹரம் முஸ்லிம்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் மாதமான மொஹரம் மாதத்தின் 10 நாள் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு வைத்து வழிபடுவர். இந்த பண்டிகை தியாகத் திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. முகமதுவின் பேரனான இமாம் ஹுசைன் இஸ்லாமிய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக தன் உயிரை ஈர்த்த திருநாள் என்று போற்றப்படுகிறது. இவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மொஹரம் மாதத்தின் 10ம் நாள் நோன்பு திறந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்த நாளில் புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து உண்ணுவர். மேலும் இந்த நன்னாளில் சமைத்த உணவை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்குவர்....
செய்திகள்தமிழகம்

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின்

மாமன்னன்‌ ராஜேந்திர சோழனின்‌ பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக்‌ கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாஜின்‌ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரியலூர்‌ மாவட்டம்‌, கங்கைகொண்ட சோழபுரத்தில்‌ மாமன்னன்‌ ராஜேந்திர சோழனால்‌ ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்‌ ஆலயம்‌ உலகப்‌ புகழ்‌ வாய்ந்த ஒன்றாகும்‌. முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ காலம்‌ முதல்‌ சோழர்களின்‌ கலை மற்றும்‌ கட்டடக்கலைகளின்‌ அழகிய தொகுப்பாகவும்‌, வாழும்‌ வரலாறாகவும்‌ விளங்குகிறது. அண்மையில்‌, ஐக்கிய நாடுகள்‌ கல்வி, அறிவியல்‌, பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலகப்‌ புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின்‌ சிறப்பினைக்‌ கண்டுகளித்திட உலகின்‌ பல்வேறு நாடுகளிலிருந்தும்‌ சுற்றுலா பயணிகள்‌ வந்து செல்கின்றனர்‌. அரியலூர்‌ மாவட்டத்தின்‌ மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில்‌ மாமன்னன்‌ ராஜேந்திர சோழனின்‌ பிறந்த நாளை முன்னிட்டு...
செய்திகள்தமிழகம்

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

கொரோனா காரணமாக பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டு வெளியிடுவது சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 26- ஆம் தேதி முதல், விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் 8 நாட்களில் 2 லட்சத்துக்கும் மாணவர்கள் சேர்கைக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவும் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று வரையில், சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப்பதிவு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும். கூடுதல் காலநீட்டிப்பு தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆண்டும் கிட்டதட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது...
1 516 517 518 519 520 544
Page 518 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!