பேராசிரியர் நா. இராமச்சந்திரனின் “துடியான சாமிகள்: வில்லுப்பாட்டும் சமூகச் சிக்கல்களும்” : நூல் அறிமுகம்
பல்லாண்டுகளுக்கு முன் சென்னையிலிருந்து மக்கள் வெளியீட்டின் வெளியீடாக வந்த இந்த நூல் மீண்டும் என்.சி.பி.எச். வெளியீடாக ஒருசில ஆண்டுகளுக்கு முன் தமிழுலகுக்குக் கிடைத்தது. என் சி பி எச் வெளியீடாக வந்தபோதே இந்நூலை நான் படித்திருந்தேன். அண்மையில் இந்நூலை மறுபடியும் வாசிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. மீண்டுமொருமுறை வாசித்தபோது அது உண்மையில் ஒரு மறு வாசிப்பாக அமைந்ததுவிட்டது. இதனால்தான் இந்நூலைப் பற்றிய அறிமுகத்தை எழுதுமாறு என் மனம் தூண்டியது. சென்ற நூற்றாண்டின்...