செய்திகள்தமிழகம்

மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் “கேக்” திருவிழா..

70views

மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் 17ம் நூற்றாண்டின் பாரம்பரிய கேக் தயாரிப்பு விழா நடைபெற்றது. 50kg உலர் பழங்கள், பாதாம் ,முந்திரி, கிரம்பு , பட்டை, ஜாதிக்காய் மற்றும் உயர் ரக ரம், ஒயின், பிரண்டி விஸ்கி ஆகிய காக்டெய்ல் கலவை 10 லிட்டர் மதுகொண்டு தயாரிக்கப்படும் “கேக் திருவிழா”.

மதுரை அருப்புக்கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பிரபல அமிக்கா ஹோட்டலில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நடைபெறும் கேக் திருவிழாவின் முன்னோட்டமாக உலர் பழங்கள் மற்றும் பாதாம் முந்திரி பிஸ்தா ஜெர்ரி ஸ்ட்ராபெரி உள்ளிட்ட 21 பழங்கள் மற்றும் சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள்.ஜாதிக்காய், பட்டை, கிராம்பு கலக்கப்பட்டு 45 நாட்கள் பதப்படுத்தப்பட்டு பின்னர் கேக் தயாரிக்கும் பணி நடைபெறும்.

இதன் முன்னோட்டமாக பாதாம், முந்திரி மற்றும் உலர் பழங்களின் கலவைகளில் உயர்ரக பிரான்டி’ரம்’ போன்ற மது வகைகள் கலக்கப்பட்டு 45 நாட்கள் காற்று புகாத ,இடங்களில் பாதுகாக்கப்படும். பின்னர் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்.கு கேக் கலந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்…

ஐரோப்பிய நாடுகளில் அறுவடை திரு விழாவாக கெண்டாப்பாட இது பின்னர் இங்கிலாந்தின் பாராம்பரிய விழாவாக17ம் நூற்றாண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

உலர் பழங்கள். மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளுடன், ஜாதிக்காய், பட்டை, கிராம்பு என நறுமணமசாலாக்கள் உயர்ரக மதுவகைகளான ரம், விஸ்கி, ஒயின் பிரான்டி எனும் காக்டெய்ல் கலவையுடன் தயாரிக்கப்படும்.

இங்கிலாந்தில் உலர் பழங்கள் .மற்றும் மது கலந்த ஒட்ஸ் கஞ்சியே பின்னால் பிளம் கேக் என தோன்றியது என தலைமை உணவு தயாரிப்பாளர் கோபி விருமாண்டி கூறினார்.

இந்த கேக் திருவிழாவின் முன்னோட்ட விழாவில் பழங்கள், பருப்புகளை கலக்கும் போட்டியில் உள்ளே மறைத்து வைக்கப்பட்ட 3 காசு களை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பொது மேலாளர் பால் அதிசயராஜ் மற்றும் தலைமை உணவு தயாரிப்பாளர் கோபி விருமாண்டி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

பேட்டி. பால் அதிசய ராஜ்,
பொது மேலாளார்.

கோபி விருமாண்டி.
பாரம்பரிய உணவு தயாரிப்பாளர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!