கட்டுரை

காத்திருக்கும் சாவிகள் : ஆசிரியர் – ஜோசப் ராஜா

28views
நூல் விமர்சனம் :
சென்ற வருடம் , அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட கொடூர யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. குழந்தைகள் கொல்லப்படுவதும், அப்பாவி மனிதர்கள் அலைகழிக்கப்படுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“யுத்தக்களத்தின் செய்தியாளன்” எல்லோர் இதயங்களையும் உடைத்து நொறுக்கக் கூடிய கவிதைகள். “பிறப்புச் சான்றிதழ்” – கவிதை மனதை துயரத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு தகப்பனின் துயரம் இனி யாருக்கும் வேண்டாம். கவிதைகள் என்பது கொள்வதும் கொடுப்பதும் என்பதால் மீண்டும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கே இந்தக் கவிதைகளை காணிக்கையாக்கி விட்டார் ஜோசப் ராஜா  அவர்கள்.
மானுட சுதந்திரத்தை பேசும் வரிகளில் ஒடுக்கப்பட்ட கனவுகள் சாம்பலாகிப்போனதை அறிகிறேன்.  இந்த யுத்தத்தை கண்டும் காணாது நாம் கடந்து விட்டால் குற்ற உணர்வில், என் கவிதைகள் கவிதைகள் அல்ல. ஈழத்து கவிஞர் எம்.ஏ.நுஹ்மான் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாலஸ்தீன கவிதைகள் என் இரவை தூங்கவிடாமல் செய்தவை.
1981 முதல் பதிப்பு. எனில் இப்போது கவிஞரும் அந்த வரிசையில் 1925 இல் இந்த க்கவிதை புத்தகம் பிரசவிக்கப்பட்டுள்ளது…. எனில் யுத்தம் எத்தனை வருடமாக நடக்கிறது? ஏன் இந்த வெறி? ஏன் இந்த அகதிகள் முகாம்கள்? வீடிழந்த மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் அல்லாடும் அவலத்தின் பின்னே இருக்கும் வெறி கொண்ட தலைவர்கள் எதற்கு மாநாடு போட்டு, விருந்துண்டு, போகத்தின்  உடையணிந்து வேஷம் போட வேண்டும்? சகமனிதனின் கண்ணீரை கடக்க முடியாது இந்த நூலை
நமக்கு சமர்ப்பிக்கிறார் ஜோசப் ராஜா அவர்கள்.
விடுதலைக்கான கவிதைகளை பாடுங்கள். கவிதைகள் மக்களுக்கானது அவர்களின் வாழ்வுக்கானது.  எடுத்துக் கொள்ளுங்கள் தோழர்களே. “சுதந்திரமாக இருப்பது என்பது ஒருவரின் சங்கிலிகளைத்துண்டிப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் வாழ்வது ” – நெல்சன் மண்டேலா. -தமிழ் அலை இசாக் அவர்கள்.
37 தலைப்புகளில் கவிதைகள் எழுதப்படவில்லை. வதையின் வார்த்தெடுக்கப்பட்ட சித்திரங்கள்.  சாமதானத்திற்கான ஆலிவ் இலைகளை எரிக்காதீர்கள். மக்கள் ஒருபோதும் யுத்தத்தை விரும்பவில்லை. மானுட விடுதலையைப் பாடுங்கள். முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேருங்கள்.
ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக பாடுங்கள். உங்கள் பாடல்கள் சுதந்திரத்தை பேசட்டும். காஸாவின் புறாக்கள் என்ன பேசும்? காத்திருக்கும் வீட்டுச்சாவிகளுக்கு அந்தக் கதவுகள் என்ன சொல்லும்? இன அழிப்பு என்பது, வல்லரசுகளின் கனவு. இடங்களை ஆக்ரமிப்பது அவர்களின் கனவு. யாருடையோ வீடுகளில் யாரோ? எங்கள் தேசத்திற்கான சாவிகள் யாரிடம் உள்ளது? எங்கள் நிலத்திற்கான சாவிகள் யாரிடம் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. ? பிரிவினைச் சுவர்கள் செய்தது என்ன? சுவர்களில் எழுதப்பட்ட விடுதலை வாசகங்கள் என்ன சொல்லும் அந்த வெறுப்பு அரசியல் செய்யும் மூடர்களுக்கு. மனிதகுலத்தை நீதியின் மறுபக்கம் நிறுத்தி வைத்தவர்களே நீங்கள் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ்வதில் எதை சாதித்தீர்கள்? “போர் என்பது போர் மட்டுமல்ல.
” மரணத்தின்
கடைசி முத்தங்களை
கண்டேன்.
பால்சுரக்காத மார்பகங்களுக்கு
மருத்துவம் பார்க்க வேண்டாம் வல்லரசுகளே.
கைவிடப்பட்ட பொம்மைகள்
பேசுகின்றன
சுதந்திரம் பற்றிய கவிதைகளை.
ஆலிவ் மரங்களே…
சுதந்திரமான
உங்களுடைய நிலத்தில்
உங்களை சந்திக்க வருவேன் ஒரு நாள்.
அர்ப்பணிப்பு – அளவிட முடியாத ஆலிவ் மரங்களை மட்டுமல்ல கணக்கற்ற கவிதைகளையும் பிரசவித்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்திற்கு.
– தயானி தாயுமானவன்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!