தமிழகம்

அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

131views
அம்பேத்கர் பிறந்த நாளில் 14-4-2025 அன்று அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் தற்காலத்தில் அதன் தேவையை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு விழா சாலிகிராம்ம் என்பது அடி ரோட்டில் உள்ள கோல்டன் பேரடைஸ் என்று திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.  அதன் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டம் இந்திய இறையாண்மை இவற்றிற்குள்ள முக்கியத்துவத்தையும் நம் மக்கள் அது எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதனை பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்ட திருத்த மசோதா எந்த அளவுக்கு நமது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது செய்யப்படுகின்ற அடக்குமுறையையும் அநியாயத்தையும் அவர்கள் சொத்தை அபகரிப்பது பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் நடிகர் திரு ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் திரு சண்முகம் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு விஸ்வநாதன் டைரக்டர் யார் கண்ணன் கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தார்கள். உண்மையிலேயே இது ஒரு அரசியல் சாசனம் சார்ந்த கூட்டமாக இருந்தாலும் அதில் முக்கியமாக இந்தியாவின் இறையாண்மை பற்றியும் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும் கலந்து கொண்டவர்கள் பேசி அந்த விழாவை சிறப்பித்தார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!