தமிழகம்

மலர்க்கண்ணன் பதிப்பகமும், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா

90views
செப்டம்பர் 24, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மலர்க்கண்ணன் பதிப்பகமும், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து ஆசிரியர் தின விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடத்தியது. விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பெருமளவில் வந்திருந்தினர். மேலும், தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்றுநர்களும், சிறுகுறு நிறுவன இயக்குநர்களும் பங்கேற்று விருது பெற்றனர். விழாவிற்கு தலைமை தாங்கி, அனைவருக்கும் விருது வழங்கி சிறப்புரையாற்றினார் திரைப்பட நடிகர், பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்மந்தம் அவர்கள். சிறப்பு விருந்தினர்களாக உயர்திரு வி.ஜி.சந்தோசம், உயர்திரு வி.கே.டி.பாலன், உயர்திரு அரங்க சுப்ரமணியம், உயர்திரு போர்முரசு கதிரவன், உயர்திரு பயில்வான் ரங்கநாதன், உயர்திரு எஸ்.வி.ரிஷி மற்றும் உயர்திரு மின்னல் ராஜா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் அறிமுகவுரையை பதிப்பாசிரியர் கவிஞர் க.மணிஎழிலன் வழங்கினார். வரவேற்புரையை முனைவர் சுதாசாரி வழங்கிட நன்றியுரையை எழுத்தாளர் தமிழ்தரணி வழங்கினார். சின்னத்திரை புகம் அனுஷா தொகுப்புரை வழங்கினார். காரப்பாக்கம் ச.பூ.அபர்ணா அவர்களின் சாத்விக கலைச் சங்கம பள்ளி மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினார்கள். செல்வி பவித்ராஸ்ரீ மணிஎழிலன், செல்வி லக்ஷனா ரிஷி மற்றும் செல்வி மைத்ரா மணிஎழிலன் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடினார்கள். ஜப்பான் நாட்டில் ஆசிரியர்கள் கைகளில் ஒரு பேன்ட் இருக்கும். அது ஆசிரியர் என்பதைக் குறிக்கும். அதனைப் பார்த்தால் பேருந்து மற்றும் ரயிலில் உடனே எழுந்து உட்கார இடம் தந்து மரியாதை செய்யும் பழக்கம் உள்ளதை ஆசிரியர் தினத்தில் சிறப்புச் செய்தியாக எழுத்தாளர் அரங்க சுப்ரமணியம் எடுத்துரைத்தார். மேலும் தமது வழக்கமான நகைச்சுவை பாணியில் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விழா சிறப்புரையை பேரா.முனைவர் கு.ஞானசம்மந்தம் அவர்கள் சிறப்பாக பேசி விழாவை சிறப்படையச் செய்தார். வெகு சிறப்பான ஆசிரியர் தின விழாவினை மலர்க்கண்ணன் பதிப்பகம் செய்து முடித்திருப்பதாக நேரில் வந்தவர்கள் பாராட்டினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!