தமிழகம்

பாரத் சேவா ரத்னா விருது – ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜனுக்கு வழங்கப்பட்டது

27views
குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டியின் சார்பில் கௌரவ‌ விருதுகள் வழங்கும் விழா கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தது வருவதற்காகவும், பல்வேறு பகுதிகளில் மக்கள் நலன் காக்கின்றன விதத்தில் பொது மருத்துவ முகாம் நடத்துதல், மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கப்பரிசு வழங்குதல் மற்றும் மேற்படிப்பிற்கான ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலன் காத்தல். மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கைத்தொழில் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் பொருளாதார மேம்பாடு பெற வழிகாட்டுதல் போன்ற பல்வேறு சமுதாய பணிகளை செய்து வரும் ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர். மு. தர்மராஜன் அவர்களுக்கு குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி சார்பில் பாரத் சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான டாக்டர்.பி.மனுவேல், மாண்புமிகு நீதியரசர்கள் டாக்டர் கே. வெங்கடேசன், திரு. எ. திருநீலபிரசாத், திரு. ஜெயக்குமார் டி. அமுந்த்ருதிமடம். வள்ளலார் பேரவை மாநில தலைவர் தவத்திரு சுவாமி பத்மேந்திரா, தமிழ் நாடு முன்னாள் சிறப்பு ஆணையர் திரு. கே. சம்பத்குமார், முன்னாள் காவல் துறை தலைவர் டாக்டர் இ.மா. மாசானமுத்து, அமைப்பின் இணை இயக்குநர் டாக்டர் கே. வளர்மதி, தினமலர் நிர்வாக இயக்குனர் திரு. தினேஷ் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் திரு.என். மதன் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர். விழாவில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் சாதனையாளர் கள் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கவிதாலயா நாட்டியப் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!