தமிழகம்

“வாழ்நாள் மக்கள் சேவகர் விருது “

23views
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் வழங்கினார்.
நாகர்கோவில் பள்ளவிளையில் இயங்கி வரும் கவிதாலயா நாட்டிய பள்ளி மாணவியர்களின் அரங்கேற்ற நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் டாக்டர் வி. நாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் கவிதாலயா நாட்டியப்பள்ளி சார்பாக இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் 2025 விருதினை, 40 ஆண்டு காலமாக சிறப்பாக சமூக சேவை செய்து வரும் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் அவர்களுக்கு வாழ்நாள் மக்கள் சேவகர் விருதினை இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். கவிதாலயா நாட்டிய பள்ளி நிறுவனர் டாக்டர் பு.நிஷா அவர்கள் தலைமை தாங்கினார். இயக்குனர் ரஜின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஐ.பி.ஆர்.சி மகேந்திரகிரி இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார்.
கவிதாலயா நாட்டிய பள்ளி மாணவ மாணவிகள். பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்வில் கவிதாலயா நாட்டியப்பள்ளி மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!