தமிழகம்

கலைமாமணி விருது பெற்ற அனுபவமிக்க, மூத்த பத்திரிகையாளர் திரு. நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் ஒரு லட்சத்திற்கான பொற்கிழி வழங்கிப் பாராட்டு

36views
கலைமாமணி விருது பெற்ற அனுபவமிக்க, மூத்த பத்திரிகையாளரான DR. திரு. நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 26.02.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான பொற்கிழி வழங்கிப் பாராட்டினார்கள். மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு பெ. சாமிநாதன் அவர்கள், தலைமைச் செயலர் திரு நா. முருகானந்தம்,IAS., அவர்கள், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் IAS., அவர்கள், கலை பண்பாட்டு துறை இயக்குநர் திருமதி கவிதா ராமு IAS., அவர்கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் திரு. வாகை சந்திரசேகர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!