‘சட்டத்தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத்!’ மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் பேச்சு!!
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “தமிழர் தந்தை ஆதித்தனார் விருது” பெற்ற சட்டக்கதிர் மாத இதழின் ஆசிரியர் முனைவர் வி.ஆர். சம்பத் அவர்களுக்கு சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். ராமன் தலைமை தாங்கினார். முனைவர் சமீம் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாணவர் சங்கத்தின்...