தீயும் கவ்வும்…
அத்தாவுல்லா நாகர்கோவில். நின்று நின்று எரிந்தன அன்று காசாவும் சுற்றுப்புறங்களும்... நாசாவும் நாசத்தின் தூதர்களுமாக வைத்த நெருப்பில்... உயர்ந்த மேடுகளும் பக்கத்துக் காடுகளும் மக்கள் வீடுகளும்.... மிஞ்சியதெல்லாம் மனிதக் கூடுகளும் பிள்ளைகள் பெண்கள் சாம்பலும் ... யார் என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை எங்களால் செய்ய முடிந்தவர்களும் செய்ய முடியவில்லை கைகட்டி நா கட்டிய சூழ்ச்சிகளால் ... எல்லாம் இழந்தும் இழக்காமல் இருந்தது , பாலஸ்தீனியரின் நம்பிக்கை நெருப்பு...