செய்திகள்தமிழகம்

திருமங்கலம் நகராட்சி முழுவதும் திமுக ஆட்சி காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையும் – நகர சபை கூட்டத்தில், நகராட்சி துணை தலைவர் உறுதி…

121views

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி சார்பில் , தமிழக அரசின் உத்தரவுப்படி நகர சபை கூட்டம் நடத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த ஆணையின்படி, கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களாக நகராட்சி சார்பில் நகர சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நான்காவது நாளாக இன்று நடைபெற்ற நகர சபை கூட்டத்தில், பெரும்பாலான மக்கள் கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

மேலும் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை கேட்டும் மக்கள் குறைகளாக பேசிய போது, திருமங்கலம் நகராட்சி முழுவதும் இந்த திமுக ஆட்சிக் காலத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை போட்டு தரப்படும் என நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உறுதி அளித்தார் .இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!