தமிழகம்

காட்பாடியை சேர்ந்த பலே கில்லாடி பெண் விஜயபானு, இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி ரூ.500 கோடி மோசடி செய்ததில் சேலத்தில் கைது !

69views
வேலூர் அடுத்த காட்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயபானு, புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை ஆரம்பித்து காட்பாடி, சித்தூர் பகுதியில் பலருக்கு லோன்வாங்கி தருகிறேன், பணத்தை இரட்டிப்பு செய்து ஏமாற்றி வந்தார்.
இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் ஒரு திருமண மண்டபத்தை வாடகை எடுத்து ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் கிடைக்கும், பிறகு 7 மாதம் கழித்து ரூ.1 லட்சம் மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி அப் பகுதியை சேர்ந்த பலபேரிடம் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.500 கோடி வரை வசூல் செய்து உள்ளனர்.
சேலம் மண்டபத்தில் சிலருக்கு பணம்கொடுத்தல், வாங்கல் நிகழ்வு நடந்துகொண்டு இருப்பதாக சேலம் உளவு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.  டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில்10 பேர் அங்கு சென்றனர். அதை வீடியோ எடுத்தனர். அதை பார்த்த கும்பல் காவலர்களை தாக்கினர்.  இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறையினர் 200-க்கும் மேற்பட்டோர் விரைந்து சென்று காட்பாடியை சேர்ந்த அறக்கட்டளை தலைவர் விஜயபானு(48) மற்றும் சேலம் பகுதியை சேர்ந் ஜெயபிரதா (47), பாஸ்கர் (49) மத மேரி (37) மைக்கேல் (34) ஆகியோரை பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.  சுமார் 2 கோடி ரூபாய் ரொக்கத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி ஒப்படைத்தனர்.
இதே பிரச்னைக்காக விஜயபானு, ஆந்திர மாநிலம் சித்தூரில் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் வெளியில் வந்து தொடர்ந்து இதுப்போன்று குழுவுடன் சேர்ந்து ஏமாற்றி வருகிறார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!