செய்திகள்தமிழகம்

நேற்று கல்லூரி வாயிலில் “கிண்டல்”.. இன்று காவல் நிலையத்தில் “பண்டல்”..

158views

செல்லூர் பெண்கள் கல்லூரி முன்பாக இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர்களை தட்டி கேட்ட தந்தை மகளுக்கு அடி உதை 6 வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

மதுரை செல்லூர் பெண்கள் கல்லூரி முன்பாக இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர்களை தட்டி கேட்ட தந்தை மகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்லூர் அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன் 54. இவரது மகளை சிலர் கேலி செய்துள்ளனர். இதை செந்தில் பாண்டியன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் செந்தூரப்பாண்டியனும் அவரது மகளும் செல்லூர் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி முன்பாக சென்றபோது வழிமறித்தனர்.

அவர்களை ஆபாசமாக பேசி கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து செந்தில் பாண்டியன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சம்பத்து பஜனைமட தெருவை சேர்ந்த முருகன் மகன் ராமமூர்த்தி26,தேனி மெயின் ரோடு அச்சம்பத்துவை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கேத்திரபாலு மகன் சோமசுந்தரம் 26, சிவஞானம் 23,அதேபகுதியை சேர்ந்த முத்துவேல் மகன் நாகப்பிரியன் என்ற நவீன் 20, கண்ணன் மகன் அஜித் குமார் 29, சதீஷ்குமார் 19 ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!