விளம்பரங்கள்

ஆனந்தம் வெற்றிப்பாதை 2025 ஆனந்தம் மாணவர்களுக்கான மூன்று நாள் வாழ்வியல் பயிலரங்கம்

114views
உங்கள் ஆதரவோடு உயர்கல்வி பெற்ற மாணவர்களை வாழ்த்திட வாருங்கள்…
ஆனந்தம் வெற்றிப்பாதை 2025 ஆனந்தம் மாணவர்களுக்கான மூன்று நாள் வாழ்வியல் பயிலரங்கம் 5th, 6th , 7th Sep
தங்களின் ஆதரவோடு நமது ஆனந்தம் அமைப்பு இதுவரை MBBS, Engineering, Law, Agri உள்ளிட்ட படிப்புகளில் 1159 மாணவ – மாணவியருக்கு உயர்கல்வி வழங்கி உள்ளது.
படிப்பை முடித்த மாணவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் Microsoft, Infosys, CTS, Accenture, IBM, HCL, TVS, Cholamandalam உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகிறார்கள்.
ஆனந்த மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான வாழ்வியல் பயிற்சிகளும் அளிக்கப்படுவது தாங்கள் அறிந்ததே.
அந்த வகையில், வெற்றிப்பாதை – 2025 , ஆனந்தம் மாணவர்களுக்கான மூன்று நாள் வாழ்வியல் பயிலரங்கம் , சென்னை குன்றத்தூர்- Chennai Institute of technology வளாகத்தில் செப்டம்பர் 5, 6 , 7 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் தலைசிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.

பயிலரங்கின் நிறைவு விழா 7 செப்டம்பர் 2025 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு நமது மாணவச் செல்வங்களை வாழ்த்திட அன்போடு அழைக்கிறோம்.
தங்களின் வருகையும் வாழ்த்தும் எங்களுக்கு பெரும் உற்சாகமளிக்கும்.
With Gratitude..
Selvakumar S
Founder Chairman
Anandham Youth Foundation

Right Click & View Source is disabled.

error: Content is protected !!