செய்திகள்தமிழகம்

இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சுமைதூக்கும் தொழிலாளி திடீரென கீழே விழுந்து படுகாயம் ஆபத்தான நிலையில் அனுமதி..

229views

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே என்று மதியம் சுமார் 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் மதுரை பைகாராவை சேர்ந்த பாண்டி வயது 60 இவர் கூடல்நகர் பகுதியில் உள்ள நுகர் பொருள் வாணிப கிடங்கில் சுமை தூக்கம் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திருப்பியபோது மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து கழகம் எதிர்புறம் வரும்பொழுது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பாண்டி சாலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பொழுது தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து புலனாய்வு சிறப்பு உதவி ஆய்வாளர் பாப்பாத்தி வாகன தணிக்கை க்காக அங்கு வந்துள்ளார். விபத்தை கண்டவுடன் விரைவாக செயல்பட்டு அங்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸை உடனடியாக நிறுத்த சொல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது பைபாஸ் சாலையில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை விபத்தில் படுகாயம் அடைந்த நபரை உடன் யாரும் இல்லை என அனுமதிக்க மறுத்து விட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியை சற்று தாமதிக்காமல் உடனடியாக மதுரை காளவாசல் பகுதியில் இருந்து 108 அவசர கால ஊர்தி அழைத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து புலனாய்வு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் பாப்பாத்தியின் செயலை பகுதி மக்கள் பாராட்டினர் சம்பவம் குறித்து மதுரை திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

IMG_4680

Right Click & View Source is disabled.

error: Content is protected !!